மக்களே.. மைல் கல்! உலக மக்கள் தொகை இன்று 800 கோடியை தாண்டியது ! அடுத்த ஆண்டு சீனாவை முந்தும் இந்தியா!
வாஷிங்டன்: உலக மக்கள் தொகை இன்று 800 கோடியைத் தொடும் எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. அடுத்தாண்டு மக்கள்தொகையில் சீனாவை இந்தியா ஓவர்டேக் செய்ய உள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. 2வது இடத்தில் இந்தியா உள்ளது. உலகில் உள்ள மொத்தம் மக்கள் தொகையில் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் சீனா, இந்தியா மட்டும் 25 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளது.
இதனால் சீனா, இந்தியா உள்பட உலக மக்கள் தொகை வளர்ச்சியை ஐநா உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது பற்றியும் பல்வேறு விஷயங்களை ஐநா பரிந்துரை செய்து வருகிறது.

2030ல் 850 கோடியாக...
மேலும் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஐநா சார்பில் மக்கள் தொகை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். அதன்படி கடந்த ஜூலை மாதம் வெளியான விபரங்களின்படி உலக மக்கள் தொகை 2030ல் 850 கோடியாகவும்(8.5 பில்லியன்), 2050ல் 970 கோடியாகவும் (9.7 பில்லியன்) இருக்கும். இது 2080ம் ஆண்டில் 1,040 கோடியாகவும் இருக்கும். இந்த விகிதம் 2100ம் ஆண்டு வரை தொடரும் என கூறப்பட்டு இருந்தது.

ஐநா பொதுச்செயலாளர்
இதுதொடர்பாக ஐநா சபையில் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறுகையில், ‛‛இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினம் என்பது ஒரு மைல்கல். உலகில் 800 கோடி மக்கள் வசிப்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு நவம்பரில் இது நடக்கலாம். இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதாபிமானத்தை அங்கீகரிப்பதற்கும் வழியாக இருக்கும். மனிதர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் வியக்கத்தக்க வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்துறையின் முன்னேற்றத்தை பார்த்த வியப்படைய நல்ல வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.

இன்று 800 கோடியைக் கடந்தது
அதன்படி உலக மக்கள் தொகையானது இன்று 800 கோடியை தொட்டுள்ளது. இது தொடர்பாக ஐநா வெளியிட்ட அறிக்கையில், உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளது. இன்று உலகின் எதாவது ஒரு பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று உலகின் மக்கள்தொகையை 800 கோடி தாண்ட வைத்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 1950ல் உலக மக்கள் தொகை 200 கோடியாக இருந்த நிலையில் தற்போது உலக மக்கள் தொகை 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

1000 கோடி மக்கள் தொகை
இருப்பினும் சமீப ஆண்டுகளாக கருவுறுதலில் சரிவு ஏற்பட்டுள்ளதால் 2050ம் ஆண்டுக்கான மக்கள்தொகை 0.5 சதவீதமாக வீழ்ச்சியடையக்கூடும். ஆனாலும் 2080 ஆம் ஆண்டு மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும். மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகள் மிகப்பெரிய அளவில் 50 சதவீதம் வரை பங்கு வகிக்க உள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியா முதலிடம்
மேலும் 2023ல் இந்தியாவின் மக்கள் தொகை என்பது சீனாவை விட அதிகரிக்கும். இந்தியாவில் தற்போது 1.39 மில்லியன் (139 கோடி) மக்கள் உள்ளனர். இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகம். பிரிட்டனை ஒப்பிடும்போது 20 மடங்கு அதிகம். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐநா கூறியுள்ளது.

தினமும் 85 ஆயிரம் பேர் பிறப்பு
இந்தியாவை பொறுத்தமட்டில் தினமும் 85 ஆயிரம் பேர் பிறப்பிக்கின்றனர். ஆனால் சீனாவில் 49, 400 பேர் தான் பிறப்பிக்கின்றனர். இதனால் இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. அதோடு இந்தியாவின் மக்கள் தொகையானது 2060ல் 1.65 பில்லியன் (165 கோடி) ஆக இருக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.

மனிதனின் ஆயுட்காலம்
மேலும் மனிதர்களின் ஆயுட்காலம் 2019ல் 72.8 ஆண்டுகளாக இருந்தது. இது கடந்த 1990ல் இருந்து 9 ஆண்டுகள் வரை முன்னேற்றம் கண்டுள்ளது. அதோடு 2050ல் ஒருவரின் ஆயுட்காலம் என்பது 77.2 ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஐநா ஏற்கனவே தெரிவித்துள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications