கொரோனா தடுப்பூசிகளால்... வேகமாக பரவும் புதிய உருமாறிய கொரோனா வகைகள்... அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன்: அதிக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ள நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா வகைகளின் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் தற்போது வரை முடியவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளும் கூட கொரோனா வைரசின் கோரப்பிடியிலிருந்து தப்பவில்லை. அந்த நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகளும் பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்தும் பணி
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொண்டு வரும் நாடுகளில் உருமாறிய கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. தனது மக்கள்தொகையில் சுமார் 30% பேருக்கு இஸ்ரேல் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளது. இருப்பினும், அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்தும்கூட உருமாறிய கொரோனா காரணமாக, வைரஸ் பரவல் குறையவில்லை என்று அந்நாட்டுச் சுகாதார துறை அமைச்சர் யூலி எடெல்ஸ்டீன் தெரிவித்துள்ளார்,

தடுப்பூசிகள் வைரஸ் பரவலை நிறுத்தாது
ஐரோப்பிய ஒன்றியம் தான் ஆர்டர் செய்த கொரோனா தடுப்பூசிகளை விரைவில் டெலிவரி செய்ய வேண்டும் என்று அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதே நேரம் அமெரிக்காவும் தனது கொரோனா தடுப்பூசியின் ஆர்டரை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால், தடுப்பூசிகளைச் செலுத்துவதினால் மட்டும் கொரோனா பரவலைக் குறைக்க முடியாது என்பதற்குச் சிறந்த உதாரணமாக இஸ்ரேல் அமைந்துள்ளது.

பிரிட்டன் வகை கொரோனா
தற்போது இஸ்ரேல் நாட்டில் மட்டுமல்ல சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா மற்ற வகைகளைவிட அதிக ஆபத்தானது இல்லை என்றாலும்கூட சுமார் 70% வரை வேகமாகப் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பூசிகள் பலன்
இவை தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படும் என்றாலும்கூட வைரஸ் பரவல் வேகமாக இருப்பதால் சிக்கல் எழுந்துள்ளதாக இஸ்ரேல் நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், "தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களில் வெறும் இரண்டு சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகத் தடுப்பூசிகள் நிச்சயம் வேலை செய்கின்றன. அதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை" என்றார்.

உருமாறும் வைரஸ்கள்
பிரிட்டன் வகை கொரோனாவுக்கு எதிராக அனைத்து வகை தடுப்பூசிகளும் வேலை செய்கின்றன. இருப்பினும், தென்னாப்பிரிக்க கொரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசிகளின் பலன் குறையும் என்றே தற்போது வரை வெளியாகியுள்ள ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. தடுப்பூசிகளிலிருந்து தன்னை தானே தற்காத்துக்கொள்ளவே வைரஸ்கள் இவ்வாறு தொடர்ந்து தன்னை உருமாறிக்கொண்டே இருப்பதாகவும் இது வைரஸ்களின் இயல்புதான் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளன












Click it and Unblock the Notifications