இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா... 9,765 பேர் புதியதாக பாதிப்பு!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.96 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.18 லட்சமாக உயர்ந்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா ஓர் ஆண்டை கடந்தும் உலக நாடுகளை ஆட்டம் காண வைத்து வருகிறது. மேலும்,. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வேறு பரவி அச்சறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.96 கோடி பேராக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 24.18 லட்சமாகும். அது போல் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8.41 கோடி பேராகும். உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா தொடந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு புதியதாக மேலும் 51,387 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு 28,316,305 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 948 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 498,197 ஆக அதிகரித்து உள்ளது.இங்கிலாந்தில் புதிதாக 9,765 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. மேலும் 230 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் புதிதாக 32,197 பேருக்கு பாதிப்பும், மேலும் 601 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 14,207பேருக்கு பாதிப்பும், 394 பேர் இறந்தும் உள்ளனர்.
பிரான்சில் 4,376பேருக்கும், இத்தாலியில் 7,351பேருக்கும், துருக்கியில் 7,945பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தொற்று பாதிப்பில் உலகளவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் புதிதாக 9,036பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 72பேர் இறந்துள்ளனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications