Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவிலுள்ள வூஹான் வைராலஜி மையத்திலிருந்து பரவிய கொரோனா? அமெரிக்கா வெளியிட்டுள்ள அதிமுக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த 2019 டிசம்பரின் கொரோனா பரவல் ஏற்படுவதற்கு முன், நவம்பர் மாதமே வூஹான் வைராஜி மையத்திலுள்ள மூன்று ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகமே கொரோனா வைரசின் கோரப் பிடியிலிருந்து இன்னும் மீளவில்லை. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் காரணமாக சில நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுத்தியுள்ளன.

இருப்பினும், வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வுகளும் தொடர்கிறது.

கொரோனா தோற்றம்

கொரோனா தோற்றம்

என்னதான் கொரோனா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் குறித்தும், அதன் தோற்றம் குறித்தும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் சீனா சென்று வந்தனர். கொரோனா தோற்றம் பற்றி சில முடிவுகளை அவர்கள் முன் வைத்தனர். ஆனால், வூஹான் வைராலஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்புகள் குறைவே என்றே அதில் கூறப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று வூஹான் வைரலாஜி மையம் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஏற்படுவதற்கு முன்னர், அதற்கு முன்னதாக நவம்பர் மாதம் வூஹான் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள், உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது என்ன மாதிரியான உடல்நிலை பாதிப்பு என்பது குறித்த தகவல்கள் அதில் இடம்பெறவில்லை. இது வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் எனக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது.

அமெரிக்கா கருத்து

அமெரிக்கா கருத்து

இது குறித்து பைடன் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்புக் குழு செய்தித் தொடர்பாளர் கருத்து கூற மறுத்துவிட்டார். இருப்பினும், கொரோனா பரவலின் தோற்றம் மற்றும் அதன் ஆரம்பக் காலங்கள் குறித்து சில முக்கிய சந்தேகங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கொரோனா வைரசின் தோற்றம் குறித்துக் கண்டறியத் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார மையம்

உலக சுகாதார மையம்

வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா பரவல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவு என உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா, நார்வே, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த முடிவுகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன. மேலும், கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளன.

சீனா மறுப்பு

சீனா மறுப்பு

அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி குறித்து சீன வெளியுறவுத் துறை கூறுகையில், வூஹான் மையத்திலிருந்தே வைரஸ் பரவியதாக உள்ளக் கருத்திற்கு அமெரிக்கா கூடுதல் முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. உண்மையாக அவர்கள் வைரசின் தோற்றம் பற்றிக் கண்டறிய முயல்கிறார்களா அல்லது பிரச்சினையைத் திசைதிருப்ப முயல்கிறார்களா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+