நீர்நிலைகளை பாதுகாக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்: உயர் நீதிமன்றத்தில் அரசு விரிவான அறிக்கை
நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தலைமைச் செயலர் அறிக்கை
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

நீர்நிலைகள் பாதுகாப்பு - குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
அந்த அறிக்கையில் "நீர்நிலைகளை பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நீர்வள ஆதாரங்களை பெருக்கி வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கான நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றி வருகிறோம், கடந்த 2020 ஆம் ஆண்டே இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு பதிவு கூடாது
அந்த பரிந்துரைகளின்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுத்துதுள்ளார். அதேபோல நீர்நிலை கட்டுமானங்களுக்கு எந்தவித மின் இணைப்பும் தரக்கூடாது, ஊரக வளர்ச்சித்துறை கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி அளிக்ககூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நீர்வல மேம்பாட்டுக்கு தனித்துறை
நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறையே உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கடந்த ஜீலை மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியளர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அதில் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூர் இளைஞர்கள், விவசாயிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்பு நீர்நிலைகள் மீட்பு
ஆக்கிமிப்பு செய்யப்பட்ட சிறு குட்டைகள் குளங்களை உள்ளுர் விவசாயிகள் இளைஞர்களின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்டி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரித்து, வருவாய்துறை செயலாளருக்கு அனுப்பு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் நீர் இருப்பையும் பாதுகாத்து பேண முடிவு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமல்லாமல், நீர்நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்ததுபோல் பேணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்டு உரிய தரத்துடன் பாதுகாக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை நீர்நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப்பட்டு, மழைகாலங்களில் திடீர் என திறந்துவிடப்பட்டு வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் கன மழையிலும் நீர் திறப்பில் ஒழுங்குமுறை
சென்னையில் கடந்த மாதம் நான்குமுறை பெய்த கனமழையால் ஆயிரம் மில்லி மீட்டருக்கு மேல் மழை இருந்தது. இதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு செயல்பட்டுவருகிறது" என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications