திக் திக் நிமிடத்தில்.. அர்ஜெண்டினா அடித்த கடைசி கோல்.. சோகத்தில் மூழ்கிய புதுச்சேரி! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்த நிலையில், அர்ஜெண்டினா இதில் ஷூட் அவுட் முறையில் வென்றது. இறுதிப் போட்டியை இந்தியா முழுக்க பலரும் நேரில் கண்டு களித்தனர்.

கத்தாரில் கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை திருவிழா கோளகமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த உலகக் கோப்பையில் பல ட்விஸ்ட்கள் நடக்கவே செய்தது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் களமிறங்கினார். இந்தப் போட்டிகளைக் காணத் தமிழ்நாட்டிலும் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி

உலகக் கோப்பை இறுதிப் போட்டி

தமிழகத்தில் பல இடங்களில் மிகப் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு.. ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து போட்டிகளைக் கண்டு ரசித்தனர். இறுதிப் போட்டிக்கே உரிய அத்தனை சுவாரசியங்களும் இதில் நிரம்பி இருந்தது. போட்டி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு நிமிடமும் அரங்கமே அதிர்ந்தது. போட்டி தொடங்கியது முதலே இரு நாட்டு வீரர்களும் கோல் அடிக்க முட்டி மோதினர். ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக்கினார். அதன் பிறகு மீண்டும் 36ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அசாத்தியமாகப் பந்தைக் கொண்டு சென்று டி மரியாவிடம் பாஸ் செய்ய, அவர் அதைக் கோலாக்கினார்.

முன்னிலை

முன்னிலை

இதன் மூலம் முதல் பாதிக்கு முன்பே 2-0 என்று அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இதனால் அர்ஜென்டினா எளிதாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், பிரான்ஸ் அணியை ஒரே ஆளாக எம்பாப்பே மீட்டு வந்தார். இரண்டாம் பாதிக்குப் பிறகு, 80வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் எம்பாப்பே. அதன் பிறகு நிமிடத்திலேயே மற்றொரு கோலை அடித்து போட்டியைச் சமனுக்குக் கொண்டு வந்தார் எம்பாப்பே.. அதன் பிறகு இரு அணிகளுமே கோல் அடிக்க முயன்றனர். இருப்பினும், அவர்களால் முடியவில்லை.

கம்பேக்

கம்பேக்

இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்தில் இரண்டாம் பாதியில் 109வது நிமிடத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடிக்க மீண்டும் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். இருப்பினும், மீண்டும் சில நொடிகளில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் மீண்டும் எம்பாப்பே 3ஆவது கோலை அடித்து அசத்தினார்.

பென்லாடி ஷூட் அவுட்

பென்லாடி ஷூட் அவுட்

இதையடுத்து வெற்றியாளரைத் தேர்வு செய்ய பென்லாடி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா உலகக்கோப்பை வென்று அசத்தியது. இதன் மூலம் அர்ஜென்டினா சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், இது அவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் கூட அர்ஜென்டினா வெற்றியை மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். போட்டியைப் பெரிய திரையில் பார்த்த ரசிகர்கள் மெஸ்ஸி வெற்றியைக் கண்டு உற்சாகமடைந்தனர்.

புதுச்சேரி சோகம்

புதுச்சேரி சோகம்

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு.. ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து போட்டிகளைக் கண்டு ரசித்தனர். முன்னால் பிரான்ஸ் காலனி பகுதியாக இருந்த புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் அதிகம். அவர்கள் பிரான்ஸ் தான் கோப்பையை வெல்ல வேண்டும் என ஆவலாக இருந்தனர். 80 நிமிடத்தில் கொடுத்த கம்பேக்கை பார்த்து உற்சாகமடைந்தனர். இருப்பினும், ஷூட் அவுடில் அர்ஜென்டினா வீரர் அடித்த கடைசி கோலை பார்த்து அவர்கள் உடைந்து போனார்கள். சோகத்துடனேயே அவர்கள் திரைகள் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து கிளம்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+