பிரபலங்களிடம் அதிகம் நடக்கும் மணமுறிவு ஏன்?.... உளவியல் நிபுணரின் பார்வையில்

Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா 18 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் திடீரென மணமுறிவு செய்துக்கொள்வதாக பரஸ்பரம் இருவரும் அறிவித்துள்ளனர். இது தனுஷ் ரசிகர்கள், ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண முறிவுக்கான காரணங்களாக ஆளாளுக்கு ஹேஷ்யங்களை அடுக்குகின்றனர். பிரபலங்கள் மணமுறிவுக்கான காரணங்களை உளவியல் பார்வையில் அணுக உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு மணந்தார். இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 18 ஆண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சென்ற வாழ்க்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாமனார் ரஜினிகாந்த், மருமகன் தனுஷ் இருவரும் தேசிய அளவில் விருதுகளைப் பெற்றபோது மகிழ்ச்சியாக டெல்லியில் ஒன்றுகூடி கொண்டாடியபோது தெரிந்தது.

ஆனால் நேற்று திடீரென இருவரும் தாங்கள் பிரிவதாக பரஸ்பரம் அறிக்கை மூலம் அறிவித்தனர். "ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்." என்று தெரிவித்திருந்தார். கட்டாயம் அவர்கள் தனி மனித சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அப்படி தலையிட கூடவும் கூடாது.

ஆனால், பிரபலங்கள், ஊடக வெளிச்சத்தில் இருப்பவர்கள் பல ஆண்டுகள் திருமண வாழ்க்கையை திடீரென முடித்துக்கொள்வதும், அது அவர்களைச் சுற்றி பல கதைகளை உருவாக்கும் என அறிந்தும், சேர்ந்துவாழ முடியாத ஏதோ ஒரு நிர்பந்தத்தால் அம்முடிவை எடுப்பது தெரிகிறது. சாதாரண நடுத்தர குடும்பங்களில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் பிள்ளைகள், சமூகம், உறவினர் போன்ற பல காரணங்களால் பிரச்சினை இருந்தும் அனுசரித்து சேர்ந்து வாழ்கின்றனர்.

ஆனால் வாழ்க்கையில் பெரிய அளவில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் மேல்தட்டு மக்கள், தங்கள் சக மனிதர்களுடன் அனுசரித்து வாழவிருப்பமின்றி திடீரென இதுபோன்ற முடிவுகளை எடுப்பது விந்தையாக படுகிறது. இதுகுறித்து அதன் பின் உள்ள பிரச்சினை குறித்து உளவியல் பார்வையில் அணுக உளவியல் நிபுணர் ஒருவரிடம் ஒன் இந்தியா ஃபிலிமிபீட் சார்பில் கேட்ட போது அவர் கூறியதாவது.

நடுத்தர வர்க்கத்தில் பிரிதல் சமாதானம் செய்யப்படுவதில் தடுக்கப்படுகிறது

நடுத்தர வர்க்கத்தில் பிரிதல் சமாதானம் செய்யப்படுவதில் தடுக்கப்படுகிறது

"இதில் என்ன நடந்தது என்று சொல்ல முடியாது. மேலோட்டமாக பார்த்தால் இதுபோன்ற தம்பதியிடம் திருமணம் ஆனாலும் சரி, தாலி என்கிற பந்தத்தில் ஒன்றாக இருந்தாலும், இருவருக்கும் ஐடியாலஜி, ஆட்டிடியூட், எண்ணங்கள் அனைத்தும் வேறு வேறாக இருக்கும். நீங்கள் கேட்டதுபோல் லோயர் மிடில் கிளாஸ், மிடில் கிளாஸ் இதில் காம்ப்ரமைஸ் செய்துக்கொள்வார்கள். கல்லானாலும் கணவன், ஆம்பிளை என்றால் இப்பத்தான் இருப்பார்கள், ஹைபர் ஆக்டிவாக கணவன் இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துதான் போகணும் என்று நடக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.

நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கம் வாழ்க்கை வெவ்வேறு வகையானவை

நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கம் வாழ்க்கை வெவ்வேறு வகையானவை

குழந்தைகள் இருக்கு, குழந்தைகளை விட்டு டைவர்ஸ் செய்து என்ன வாழ்க்கை வாழப்போகிறாய் என்றெல்லாம் பேசி ஒன்றாக வாழும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். பெரும்பாலான டைவர்ஸ், பிரிதல் போன்றவை குழந்தைகள் காரணமாக பாதுகாக்கப்படும். ஆனால் மேல்தட்டு வர்க்க மக்கள் வேல்யூஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், ஐடியாலஜிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த லைனுக்குள் நீ வந்த்துவிடக்கூடாது, அந்த லைனுக்குள் நான் வரமாட்டேன். உதாரணத்திற்கு நைட் பார்ட்டிகள், ஹீரோ, ஹீரோயின் கட்டியணைப்பது, படங்களை தேர்வு செய்வது போன்ற விஷ்யங்கள் இருக்கும்.

மேல்தட்டு வாழ்க்கையில் கேரியர் திருமணத்தால் பாதிக்கும் என்றால் உதறவும் தயாராக இருக்கிறார்கள்

மேல்தட்டு வாழ்க்கையில் கேரியர் திருமணத்தால் பாதிக்கும் என்றால் உதறவும் தயாராக இருக்கிறார்கள்

ஒரு சாதாரண மேல்தட்டு வர்க்க நபர் தங்கள் வியாபாரத்தில் நள்ளிரவுக்கு மேல்தான் வரவேண்டி இருக்கும் என்ற நிலை இருக்கும். இதை பார்ட்னர் ஏற்றுக்கொள்ள மாட்டார். இதனால் இருவருக்கும் இடையில் விரிசல் வரும். எனக்கு கேரியர் தான் முக்கியம் திருமண வாழ்க்கை தடையாக இருந்தால் அதை தவிர்க்க தயங்க மாட்டேன் என நினைப்பார்கள். அதனால் காதும் காதும் வைத்த மாதிரி பிரிந்துபோகலாம் என வாழ்வார்கள். இன்னும் சிலர் என் கேரியர் திருமண வாழ்க்கைக்கு தடையாக உள்ளது. எனக்கு என் கேரியர்தான் முக்கியம் என்று முடிவெடுப்பார்கள்.

பிரிவு 50 வயதில் கூட வரலாம் அதை தவறென்று சொல்ல முடியாது

பிரிவு 50 வயதில் கூட வரலாம் அதை தவறென்று சொல்ல முடியாது

இதற்கு திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாமே என்று கேட்டால் அது சிறுவயதில் பெற்றோர் நிர்பந்தத்தால் மறுக்க முடியாமல் நடந்தது என்பார்கள். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தனக்கு ஒரு ரியலைசேஷன் வரும்போதுதான் எனக்கு கல்யாண வாழ்க்கை சரிப்பட்டு வராது எனக்கு என்கேரியர் தான் முக்கியம், வழக்கமான வாழ்க்கையில் இருக்க முடியாது என்று சென்றவர்கள் உண்டு. தனுஷ் வாழ்க்கையில் இதுபோன்ற விஷயம் ரியலைசேஷன் ஒரு ஆண்டில் வரணும், 18 ஆண்டில் வரணும் என்றுகூட இல்லை அது 50 வயதில் தனியாக பிரிந்துச் சென்றவர்கள் கூட உண்டு.

பிரிவதில் பல வகை உண்டு

பிரிவதில் பல வகை உண்டு

சிலர் கோர்ட்டுக்குகூட போகலாம் ஆளாளுக்கு தனித்து வேறு வேறு ஊர்களில் வசிக்கலாம். ரியலைசேஷன் வந்தப்பின் அவர் ஒரு மாறுப்பட்ட பாதை, நான் ஒரு மாறுப்பட்ட பாதை என ஒருகட்டத்தில் இதற்கு பின்னர் ஒன்றாக இருந்தால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்து பிரிந்திருக்கலாம். இவர்கள் கேரியரில் எந்தவிதமான தொல்லைகளும் வராது, தனுஷின் கேரியரிலும் எந்தவிதமான தொல்லையும் வராது என முடிவெடுத்திருக்கலாம்.

வெளியிலிருந்து பிரச்சினையை பார்க்க முடியாது

வெளியிலிருந்து பிரச்சினையை பார்க்க முடியாது

வெளியிலிருந்து பார்க்கும்போது தனுஷ் இவ்வளவு பெரிய குடும்பத்தில் மருமகன் இப்படி ஒரு முடிவை எடுக்கவேண்டுமா? மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வெளியே வரவேண்டுமா என நினைக்கலாம். ஆனால் தனுஷினுடைய நிலையிலிருந்து பார்க்கும்போது அவருடைய தனித்தன்மை நாட்கள் நகர நகர இல்லாமல் போவதாக அவர் உணர்ந்து முடிவில் இந்த முடிவுக்கு கூட வந்திருக்கலாம். பாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் அமீர்கான் போன்றோர் டைவர்ஸ், டைவர்ஸ் என 3 திருமணம் வரை செய்துள்ளார்.

திருமண வாழ்க்கை மட்டுமே ஒழுக்கத்தின் அடையாளம் என முடிவு செய்ய முடியாது

திருமண வாழ்க்கை மட்டுமே ஒழுக்கத்தின் அடையாளம் என முடிவு செய்ய முடியாது

செலிபிரிட்டிகள் இதுபோன்று பிரிவது சகஜம். கல்யாண வாழ்க்கையில் சரியாக இருந்தால் ரொம்ப நல்லவர் என்ற பேட்டர்ன் எல்லாம் இப்போது கிடையாது. கமல்ஹாசன், பார்த்திபன் போன்று தனியாகவே இருந்தால்கூட அவர்கள் சரியான அடையாளத்துடன் தான் உள்ளார்கள். கல்யாணம் என்பது ஒழுக்கத்தின் அடையாளம் என்பதல்ல.

ஆனால் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படும் அல்லவா?

ஆனால் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படும் அல்லவா?

இப்போதெல்லாம் அப்படி இல்லை, எனக்கு தெரிந்து பலர் குழந்தைகள் அவரவர் விருப்பப்பட்ட இடத்தில் இருக்கட்டும், அல்லது வாரம் ஒருமுறை பார்ப்பது, அல்லது அவரவர் குழந்தைகளை பிரித்துக்கொள்வது போன்றவற்றில் தெளிவாக இருக்கிறார்கள். நிறைய முன்னேற்றம் உள்ளது. குழந்தைகள் மன நிலை பாதிக்கப்படாமல் இருக்க கவுன்சிலிங் கூட கொடுக்கிறார்கள்.

குழந்தைகள் மனநலன் பாதிக்கும்- கவுன்சிலிங் சரி செய்யும்

குழந்தைகள் மனநலன் பாதிக்கும்- கவுன்சிலிங் சரி செய்யும்

ஆனால் குழந்தைகள் மன நிலையில் இருந்து பார்த்தால் அது அவர்களை பல விதத்தில் பாதிக்கும். பெற்றோர் திடீரென பிரிவது அவர்கள் மன நிலையை பாதிக்கும். படிப்பு, பொதுவெளியில் பிரச்சினைகளை அணுகுவது, குடும்ப நலக்கோர்ட் போன்ற இடங்களுக்கு செல்வது அவர்களை மனதளவில் பாதிக்கத்தான் செய்யும். அதற்காக தற்போதெல்லாம் கவுன்சிலிங் கொடுத்து சரி செய்கிறார்கள்.

பிரிவது தவறில்லை

பிரிவது தவறில்லை

ஆகவே அவர்கள் அனைத்துக்கும் தயாராக இருக்கிறார்கள். ஆகவே மிடில்கிளாஸ் பார்வையில் ரஜினிகாந்த் குடும்பத்தில் இருந்து வெளியில் வருகிறாரே. 18 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டார்களே என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் பார்வையில் வேறுவிதமாக பிரச்சினைகள் உருவாகி பல முயற்சிகள் எடுக்கப்பட்டு, கவுன்சிலிங்கும் போய் பார்த்தும் சரியாகவில்லை ஆகவே பிரியலாம் என்றுக்கூட முடிவெடுத்திருக்கலாம் அதை யாரும் தவறென்று சொல்ல முடியாது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+