ஹலோ ஹலோ.. எப்படி இருக்கீங்க.. நேத்து என்ன நாள் தெரியுமா?
ஹலோ ஹலோ.. எப்படி இருக்கீங்க.. நேத்து என்ன நாள் தெரியுமா?
நாம் அன்றாட வாழ்வியலில் தொலைத்தொடர்புச் சாதனங்கள் மாபெரும் பங்கு வகிக்கிறது. முற்காலத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள புறாவைப் பயன்படுத்தினோம். பின் 1865ஆம் ஆண்டு முதல் தந்தி மூலம் தகவல் பரிமாறப்பட்டது. 1935 பின் முதல் தந்தி சங்கம் தொலைத்தொடர்பு சங்கமாக மாற்றப்பட்டது. அதனால் நேற்று உலக தொலைத்தொடர்பு தினமாகக் கொண்டாடப்பட்டது.
இன்று தொலைபேசி வாயிலாக நம் உறவுகள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுடன் பேசி மகிழ்கிறோம். கம்பியில்லா தொலைபேசி மூலம் உடனுக்குடன் தகவல்களைப் பெறுகிறோம்.தொலைக்காட்சி தொலைப்பேசி கைப்பேசி போன்றவற்றின் மூலம் நடப்பு நிகழ்வுகளை அறிந்துக் கொள்கிறோம்.

இன்று நாம் மற்றவர்களுக்குச் செய்திகளைப் பகிருவதற்கு தொலைத்தொடர்புச் சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.குறுஞ்செய்தி மின்னஞ்சல் மோன்றவற்றால் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி தற்போது தொலைத்தொடர்புத் துறையில் இணையம் பெரும்பங்கு ஆற்றுகிறது.

வாட்ஸப் ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலிருந்துத் தகவல்களைப் பெற இணையம் உதவுகிறது. இன்று நம் வாழ்வில் தொலைத்தொடர்புச் சாதனங்கள் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் கற்றல் திறனையும் மேம்படுத்த உதவுகிறது.
இன்றைய நிலையில் தொலைத்தொடர்புத்துறை மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளுக்கு உபயோகப்படுத்திடுவோம் தொலைத்தொடர்புச் சாதனங்களை. அதை விட முக்கியமாக.. இன்றைய லாக்டவுன் காலத்தில் தொலைத் தொடர்பு வசதிகள் எந்த அளவுக்கு நம்மை ஆக்டிவாக வைத்துக் கொள்ளஉதவுகின்றன என்பதையும் நாம் நினைவு கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications