தங்கம், வெள்ளி விலை: சாமானியர்களுக்கு விழுந்த பேரிடி!! நாளைக்கு பெரிய சூறாவளியே காத்திருக்கு!!
லட்சக்கணக்கான சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் சென்னையில் இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக தங்கம் விலை 1.5 லட்சத்தையும், வெள்ளி விலை 4 லட்சத்தையும் தொட்டுவிட்டன.
சென்னையில் திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து 15,025 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் அதிசயமாக தங்கத்தின் விலை குறைந்தது. கிராமுக்கு 65 ரூபாய் விலை சரிந்து 14,960 ரூபாய்க்கு விற்பனையானது. பரவாயில்லை தங்கம் விலை குறைகிறது என மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் நேற்றைய விட பல மடங்கு வேகமாக இன்று தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது.

ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 370 ரூபாய் விலை உயர்ந்து 15,330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்றைய விட 2,960 ரூபாய் விலை உயர்ந்து 1,22,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1.5 லட்சம் ரூபாயை கடந்துவிட்டது. அதாவது 1, 53,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இப்படி பல மடங்கு உயர்ந்திருப்பது திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வைத்திருக்கும் குடும்பங்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்து இருக்கிறது.
இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை காத்திருக்கலாமா?
தங்கத்தின் விலை இந்த மாதத்தில் மட்டும் ஒரு கிராமுக்கு 2,890 ரூபாயும் ஒரு சவரனுக்கு 23,120 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 16,734 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,33,872 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1, 67,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் விலை உயர்வு கண்டிருக்கிறது. ஒரு கிராம் 12,785 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,02,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால் வெள்ளி விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 13 ரூபாய் விலை உயர்ந்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 4 லட்சம் ரூபாய் என வரலாற்று உச்சபட்ச விலையில் இருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 256 ரூபாய், அதுவே இன்றைய தினம் 400 ரூபாய்.
தங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!
ஜனவரி மாதத்தில் இந்த 28 நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 144 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 1,44,000 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் வட்டி குறைப்பு நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்ததே இன்று தங்கம், வெள்ளி விலை உயர காரணம். ஒரு வேளை வட்டி குறைக்கப்பட்டால் நாளைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வதை யாராலும் தடுக்க முடியாது.
Credit: Goodreturns
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications