கனடாவில் குட்டி விமானம் விபத்தில் சிக்கி 2 பேர் பலி
விர்னான்: கனடாவில் குட்டி விமானம் ஒன்று விபத்து சிக்கி தீப்பிடித்ததில், விமானத்தில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒக்கனங்கன் பள்ளதாக்கில் இருந்து 2 பேர் மட்டுமே பயணிக்க கூடிய இரட்டை என்ஜீனை கொண்ட குட்டி விமானம் மேல் நோக்கி பறந்தது. ஆனால் சற்றுநேரத்தில் அருகில் உள்ள 2 மரங்களில் அடுத்தடுத்து மோதி ஒரு விளையாட்டு மைதானத்தை தாண்டி சென்று கீழே விழுந்து விபத்தை சந்தித்தது.
இவ்விபத்தில் விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் உள்ளே இருந்த 2 பேரும் கருதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தின் போது அவ்வழியாக சென்ற காவல் துறை செய்தித் தொடர்பாளர் கோர்டு மோலின்டைக் என்பவர் விபத்தை நேரில் பார்த்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஒரு பயங்கர சத்தம் கேட்டு மேலே பார்த்தேன். அப்போது குட்டி விமானம் ஒன்று வெடித்து, தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. விமானத்தின் அனைத்து பாகங்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தது.
விமான நிலையத்தில் இருந்து மேல் நோக்கி பறந்த விமானம், அருகில் இருந்த 8 மீட்டர் உயரம் கொண்ட 2 மரங்களின் மீது மோதியது. இதில் வெடித்து சிதறிய விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் தரையில் வந்து விழுந்தது. ஆனால் விமானம் விழுந்த பகுதியில் மனித நடமாட்டம் இருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது என்றார்.
விபத்தை சந்தித்த விமானத்தை 59 வயதான பைலட் ஓட்டி சென்றதாகவும், அவருடன் 55 வயது உள்ள பயணி ஒருவர் இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் அதிகார பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றார்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரும், விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications