Avatar Fire and Ash OTT: அவதார் 3 ஓடிடி ரிலீஸ் எப்போ? கண்கவர் உலகம்! எதிர்பார்க்காத வசூல்! இதுவும் செம தான்!
சென்னை: ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படங்கள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். "இந்த தடவை என்ன புதுசா காட்டப் போறாரு?"ன்னு தான் எல்லாரும் காத்திருப்பாங்க. அந்த வரிசையில் மூன்றாவது பாகமாக வந்திருக்கும் 'Avatar: Fire and Ash', டிசம்பர் 19, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி இப்போ ரசிகர்களிடம் கலந்த ரியாக்ஷன் வாங்கிட்டு இருக்கு.
இந்த படம், 'Avatar: The Way of Water' முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே தொடங்குது. ஜேக் சல்லி, நெய்திரி, அவர்களுடைய குடும்பம் இன்னொரு பெரிய பிரச்சனையை சந்திக்குறாங்க. இந்த தடவை மனிதர்கள் மட்டும் எதிரி கிடையாது. பாண்டோராவே எரிய ஆரம்பிக்குது. எரிமலைப் பகுதிகளில் வாழ்ந்த ஆஷ் பீப்புள் என்ற புதிய நாவி குலம் அறிமுகமாகுது.

தங்கள் நிலத்தை இழந்த கோபம், வெறுப்பு, பழிவாங்கும் மனசு - இதுதான் இந்த குலத்தின் அடையாளம். அந்த குலத்தின் தலைவியாக வரும் வராங் கேரக்டர், இதுவரை பார்த்த நாவிகளிலிருந்து முற்றிலும் வேற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்குது.
கதை ரொம்ப டார்க்
குடும்ப இழப்பு, கோபம், போரின் விளைவுகள் எல்லாம் நிறைய பேசப்படுது. விஜுவல்ஸ்ல எந்த குறையும் இல்லை. பாண்டோரா உலகம் இன்னும் அழகா, இன்னும் பிரம்மாண்டமா திரையில் தெரிகிறது. ஆனா, கதை ஓட்டம், சில கேரக்டர் டிசிஷன்ஸ் எல்லாம் ரசிகர்களை இரண்டு பக்கமாகப் பிரிச்சிருக்குது. ஒருத்தர் "இதுதான் பெஸ்ட் அவதார்"ன்னு சொல்லுறார்; இன்னொருத்தர் "நீளம் அதிகம், அவதார் 2 மாதிரியே இருக்கு"ன்னு சொல்றார்.
பாக்ஸ் ஆபீஸ் விஷயத்துக்கு வந்தா, இந்த படம் உலக அளவில் நல்ல ஓப்பனிங் எடுத்தாலும், 'Avatar: The Way of Water' மாதிரி மிகப்பெரிய சாதனை படைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்குது. அவதார் 2 உலகம் முழுக்க சுமார் 2 பில்லியன் டாலர் வசூல் செய்தது. அந்த அளவுக்கு இந்த 'Fire and Ash' போக வாய்ப்பில்லைன்னு வர்த்தக வட்டாரங்கள் இப்போவே பேச ஆரம்பிச்சுட்டாங்க. காரணம், கலந்த விமர்சனங்களும், நீண்ட ரன்னிங் டைமும்.
அவதார் 3 ஓடிடி
இந்த நிலையில் ரசிகர்கள் அதிகம் கேட்குற கேள்வி -"ஓடிடியில் எப்போ வரும்?". தற்போதைய தகவல்படி, 'Avatar: Fire and Ash' ஓடிடி ரிலீஸ் 2026 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூனின் முந்தைய அவதார் படங்களை போலவே, இந்த படமும் தியேட்டரில் நல்ல ரன்னுக்குப் பிறகே டிஜிட்டல் பிளாட்ஃபாரத்திற்கு வரும். ஓடிடி ரைட்ஸ் எந்த பிளாட்ஃபாரத்திற்கு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆனால், டிஸ்னி தொடர்புடைய ஸ்ட்ரீமிங் சேவையில்தான் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகம்.
மொத்தத்தில், அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ் தியேட்டரில் பார்த்தால் வியூவல் அனுபவம் நிச்சயம் கிடைக்கும் படம். ஆனா, கதையில் எல்லாரையும் திருப்திப்படுத்தியதா? என்றால் அதுக்கு பதில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி. அவதார் முதல் பாகம் 2.95 பில்லியன் வரை வசூல் செய்தது. சுமார் 25 ஆயிரம் கோடி வசூலை உலக அளவில் பெற்று இருந்தது.
அதேபோல அவதார் இரண்டாவது பாகம் 2 பில்லியன் வரை வசூல் பெற்றது. ஆனால் மூன்றாவது பாகம் 2 பில்லியன் வசூலை நெருங்க வாய்ப்பே இல்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு இந்த படங்களை ஓடிடியில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதும் காரணம் என்றும் கூறப்படுகிறது.
Avatar 3 collection: அவதார் 3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடி! பெரிய ஆர்ப்பாட்டம் இல்ல, ஆனாலும் கலக்குறாங்க
தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள், "ஓடிடி வரட்டும் அப்போ பார்த்துக்கலாம்"ன்னு சிலர் காத்திருக்கின்றனர். ஆனால் 3d மற்றும் ஐ மேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி இருக்கும் அவதார் திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் அதற்குள்ள திரில் கிடைக்கும் என்று அவதார் படத்தின் தீவரமான ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications