Avatar 3 collection: அவதார் 3 படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடி! பெரிய ஆர்ப்பாட்டம் இல்ல, ஆனாலும் கலக்குறாங்க
சென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' படம் டிசம்பர் 19, 2025 அன்று இந்தியா முழுக்க திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்குது. அவதார் சீரிஸின் மூன்றாவது பாகம் என்பதாலே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனா, முதல் நாள் வசூல் வந்ததும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கலந்த கருத்து தான்.
இந்த படம் இந்தியாவில் முதல் நாளிலேயே சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருக்குன்னு சொல்லப்படுது. இது மோசமான ஓப்பனிங் கிடையாது. அதே நேரத்தில், "அவதார்"ன்னு பேர் இருக்கற படத்துக்கு இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்குமோன்னு எதிர்பார்த்தவர்களும் இருக்காங்க.

காரணம் என்னன்னா, இதுக்கு முந்தைய படம் 'Avatar: The Way of Water' இந்தியாவில் முதல் நாளிலேயே சுமார் 40 கோடிக்கு மேல வசூல் பண்ணியது. அதை ஒப்பிடும்போது, இந்த தடவை ஆரம்பம் பாதி அளவுக்கு தான் வந்திருக்கு. அதனாலே சிலர், "இந்த தடவை அவதார் அந்த அளவுக்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்கல"ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.
இதுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுறது, இதே நேரத்துல ரிலீஸ் ஆன 'துரந்தர்' படமும். ரன்வீர் சிங் நடித்த அந்த படம் சில பகுதிகளில் நல்ல கூட்டத்தை இழுத்திருக்குது. அதனால், சில தியேட்டர்களில் அவதார் எதிர்பார்த்த அளவுக்கு முழு ஹவுஸ் போகவில்லைன்னு சொல்றாங்க.
ஆனா, எல்லாமே நெகட்டிவ் இல்லை. சில வர்த்தக வட்டாரங்கள்,"இது அவதார் படம். முதல் நாள் விட, வீக்கெண்ட்ல தான் உண்மையான ரிசல்ட் தெரியும்"அப்படின்னு சொல்றாங்க. குறிப்பாக குடும்ப ஆடியன்ஸ் மற்றும் 3D-க்கு வருவோர் அதிகரிச்சா, வசூல் நல்லா ஏறும் என்ற நம்பிக்கையும் இருக்கு.
மொத்தத்தில்,'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' - இந்தியாவில் ஒரு பெரிய வெடிப்போடு ஆரம்பிக்கல. ஆனா, மெதுவா ஓட ஆரம்பிச்சிருக்குது. இனி சனி, ஞாயிறு கூட்டம் எப்படி இருக்குதுன்னு பார்த்தால்தான், இந்த படம் உண்மையிலேயே பாக்ஸ் ஆபீஸ்ல எங்க நிற்கப்போகுதுன்னு தெரியும்.
"கதை எப்படி இருந்தாலும் தியேட்டர்ல தான் பார்க்கணும்"னு சொல்லுற கூட்டம் இந்த படத்துக்கு இன்னும் துணை நிற்கும். ஆனா, "வசூல் தான் எல்லாம்"ன்னு பார்ப்பவர்களுக்கு, இந்த ஓப்பனிங் கொஞ்சம் சராசரிதான்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications