75 வயது மூதாட்டிற்கு ரயிலில் மிடில் பெர்த்.. ஆவேசப்பட்ட பயணி.. ரயில்வே பொறுமையாக தந்த பதில்

Subscribe to Oneindia Tamil

கோவை: இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு முறை மிகவும் மோசமானது! மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 18-20 இருக்கைகள் (பெர்த்துகள்) காலியாக இருக்கும் நிலையில், 75 வயது மூதாட்டிக்கு எப்படி மிடில் பெர்த் ஒதுக்க முடியும் என்று பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது டிக்கெட் முன்பதிவின்போது நடந்த தவறு என்ன, ஏன் அவருக்கு மிடில் பெர்த் கிடைத்தது என்பது குறித்து ரயில்வே பதில் அளித்துள்ளது.

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பலர் செய்யும் ஒரு தவறைத்தான் இந்தப் பயணியும் செய்திருந்தார். அவர் என்ன தவறு செய்தார் என்பதை முதலில் பார்ப்போம்.

Railway s response regarding the allotment of a middle berth to a 75-year-old woman on a train

அவர் மூன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். அதில் ராஜகுமாரி என்பவருக்கு 75 வயதாகிறது. அவருக்கு எஸ்7 கோச்சில் மிடில் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்வாதி பாண்டே என்பவருக்கு 21 வயதாகிறது. இவருக்கு எஸ்7 கோச்சில் அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, ரமேஷ் மிஸ்ராவுக்கு 39 வயதாகிறது. இவருக்கும் எஸ்7 கோச்சில் சைடு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டைப் பார்த்து கோபமடைந்துதான் பயணி, "இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு முறை மிகவும் மோசமானது! மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 18-20 இருக்கைகள் (பெர்த்துகள்) காலியாக இருக்கும் நிலையில், 75 வயது மூதாட்டிக்கு எப்படி மிடில் பெர்த் ஒதுக்கலாம்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 75 வயது மூதாட்டிக்கு லோயர் பெர்த் வேண்டும் என்று தேர்வு செய்திருக்க வேண்டும். அடுத்ததாகக் கீழே ஒரு ஆப்ஷன் காட்டப்படும். அந்த ஆப்ஷன்தான் மிகவும் முக்கியமானது. குறைந்தபட்சம் ஒரு லோயர் பெர்த் கிடைத்தால் மட்டுமே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்ற ஆப்ஷன் அது. அதைத் தேர்வு செய்யாமல் விட்டதால்தான் 75 வயது மூதாட்டிக்கு லோயர் பெர்த் கிடைக்கவில்லை என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். ஏனெனில், ரிசர்வேஷன் சாய்ஸ் (Reservation Choice) என்ற இடத்தில் 'None' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை மாற்றி முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

ஒரே பிஎன்ஆர் (PNR) எண்ணின் கீழ் மூன்று நபர்களுக்கு முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீட்டின் (Senior Citizens Quota) கீழ் இருவரை மட்டுமே பதிவு செய்ய முடியும். மூன்றாவது நபரைச் சேர்க்கும்போது, அவர் தானாகவே பொதுப் பிரிவின் (General Quota) கீழ் வந்துவிடுவார் என்று ஒரு நெட்டிசன் கூறியிருந்தார்.

இதுபற்றி பயணி கூறுகையில், "ரயில் முன்பதிவு முறை, குறிப்பாகக் கீழ் இருக்கைகள் காலியாக இருக்கும்போது, முதிய பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும். உண்மையாகவே கீழ் இருக்கை தேவைப்படுபவர்களுக்கு, காலியாக உள்ள அந்த இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய இந்த முறை ஏன் தவறிவிடுகிறது என்பதுதான் கேள்வி. நீங்கள் குறிப்பிட்ட இரண்டு விருப்பங்களையுமே நான் பயன்படுத்தினேன்" என்றார்.

அதற்கு பதிலளித்த நெட்டிசன், "நீங்கள் முதல் விருப்பத்தைத் (முதியோர் ஒதுக்கீடு - Senior Citizens Quota) தேர்ந்தெடுத்தால், உங்களால் அதிகபட்சம் இரண்டு டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால், நீங்கள் மூன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றுள்ளீர்கள்.

இரண்டாவது விருப்பத்தைப் பொறுத்தவரை (குறைந்தது இரண்டு கீழ் இருக்கைகள் - Lower Berths), பணம் செலுத்திய பிறகு, இருக்கைகள் கிடைத்தால் அவை ஒதுக்கப்படும். ஒருவேளை உங்கள் கோரிக்கையின்படி இருக்கைகள் கிடைக்கவில்லை என்றால், முன்பதிவைத் தொடரலாமா என்று உங்களிடம் கேட்கப்படும்" என்றார்.

இவர்களின் பதில்கள் ஒருபுறம் இருக்க, ரயில்வே அளித்த விளக்கத்தில், "இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு முறையில், முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தானாகவே கீழ் படுக்கையை (Lower Berth) ஒதுக்கீடு செய்வதற்கான வசதி உள்ளது. இருப்பினும், இது முன்பதிவு செய்யும் நேரத்தில் கீழ் படுக்கைகள் கிடைப்பதைப் பொறுத்தே அமையும்.

மேலும், ரயில்களில் முன்பதிவின்போது கீழ் படுக்கைகள் கிடைக்காததால் நடு அல்லது மேல் படுக்கைகள் ஒதுக்கப்பட்ட முதியவர்களுக்கு, காலியாக இருக்கும் கீழ் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய டிக்கெட் பரிசோதனைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இணையம் வழியாக முன்பதிவு செய்யும்போது, கீழ் படுக்கை கிடைத்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. இத்தகைய சூழலில், கீழ் படுக்கை கிடைத்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+