காலையில் அம்பி - இரவில் அந்நியன்.. குழந்தை இல்லைனு டார்ச்சர் செய்த கணவருக்கு, பெண் கொடுத்த தண்டனை - உயிரே போச்சு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் பகலில் அந்தியன் படத்தில் வரும் நடிகர் விக்ரமின் 'அம்பி'போல் பாசத்துடன் நடந்து கொள்ளும் கணவர் இரவில் அந்நியனைப் போல் மாறி மனைவிக்கு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி சித்ரவதை செய்து வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கத்தியை எடுத்து கணவரை குத்தி கொன்ற சம்பவம் பெங்களூரை திடுக்கிட வைத்துள்ளது.

bengaluru-woman-stabs-husband-after-frequently-quarrelled-over-not-having-children

பெங்களூர் லட்சுமிபுரா பகுதியில் வசித்து வந்தவர் ராஜசேகர் (வயது 43). இவர் தனியார் வங்கியில் 'லோன் ஏஜென்ட்' ஆக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெயர் மாலாஸ்ரீ (35). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ராஜசேகர் - மாலாஸ்ரீ தம்பதி முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டின் தரைதளத்தில் ராஜசேகரின் பெற்றோர் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவில் ராஜசேகர் - மாலாஸ்ரீ இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின்போது இருவரும் வாக்குவாதம் செய்தனர். அதன்பிறகு திடீரென்று சத்தம் எதுவும் கேட்கவில்லை. இதனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வந்தது. இதற்கிடையே மாலாஸ்ரீ தனது குடும்பத்துக்கு போன் செய்து சண்டையில் கத்தியால் ராஜசேகரை குத்திவிட்டதாக கூறி அழுதார்.

உடனடியாக ராஜசேகரின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர். அங்கு ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவர்கள் ராஜசேகரை மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ராஜசேகரின் மனைவி மாலாஸ்ரீயை பிடித்து விசாரித்தனர். அப்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. தனது கணவர் ராஜசேகரை கத்தியால் குத்தி கொன்றதை மாலாஸ்ரீ ஒப்புக்கொண்டார். இதுபற்றி அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

''எனக்கும், ராஜசேகருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. என்னுடைய கணவர் என்னை பகலில் நன்றாக பார்த்து கொள்வார். ஆனால் இரவில் சித்ரவதை செய்வார். குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி இரவில் மதுபானம் குடித்து வந்து அடித்து உதைப்பார். நேற்று முன்தினமும் எங்களுக்குள் சண்டை வந்தது. ஆத்திரத்தில் கத்தியை எடுத்து குத்தினேன். அவர் இறந்துவிட்டார்'' என்று கூறி அழுதார்.

இதையடுத்து கெம்பேகவுடா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலாஸ்ரீயை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: ''ராஜசேகர் - மாலாஸ்ரீ தம்பதிக்கு திருமணம் ஆகியிருந்தாலும் குழந்தை இல்லை. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ராஜசேகர் மதுபானம் குடித்து வந்து இரவில் மனைவியை திட்டி டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

இதனால் மாலாஸ்ரீ நொந்து போனார். அவர் மனஅழுத்தத்துக்கு ஆளானார். மனஅழுத்த பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்காக 3 மாதம் சிகிச்சையும் பெற்றார். அதன்பிறகும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.

நவம்பர் 11ம் தேதி இரவிலும் ராஜசேகர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து குழந்தை இல்லை என்று சண்டை செய்துள்ளார் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மாலாஸ்ரீ, கத்தியை எடுத்து ராஜசேகரை குத்தினார். ராஜசேகரின் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தினார். இதில் ராஜசேகர் இறந்தார். மாலாஸ்ரீயிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+