சூர்யாவின் "சீன்” ஒரு வாரத்தில் வசூலில் செய்த சாதனை! நேற்றைய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் களமிறங்கிய சூர்யாவின் சீன் திரைப்படம் முதல் வாரத்திலேயே உலக முழுவதும் 200 கோடி வசூலை கடந்து கவனம் ஈர்த்து இருக்கிறது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தொடக்கத்தில் நல்ல வசூலை பெற்றது. குறிப்பாக முதல் 3 நாட்களும் வசூல் ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால் வார நாட்கள் தொடங்கியதும் வசூல் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய வசூல் தகவல் இப்போ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சீன் பட வசூல் நிலவரம்
பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக்னிக் வெளியிட்டுள்ள பாக்ஸ் ஆபீஸ் கணக்கின்படி, நவம்பர் 12ஆம் தேதியான நேற்று சீன் திரைப்படம் இந்தியாவில் நெட் வசூலாக 6.18 கோடி பெற்றிருக்கிறது. இதில் தமிழ் ரிலீஸ் மட்டும் 4.50 கோடியும் தெலுங்கு ரிலீஸ் 1.60 கோடியும் பெற்று இருக்கிறது. இதற்கு முந்தைய நாளான 8.05 கோடி வசூலித்திருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நேற்று சுமார் 24.2% வசூல் குறைந்து இருக்கிறது. அதாவது வாரத்தின் முதல் பாதியில் இருந்த வேகம் இப்ப கொஞ்சம் குறைய தொடங்கி இருக்கிறது.

படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் 19. 15 கோடி நெட் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2வது நாளில் 20.35 கோடியாகவும் ஞாயிற்றுக்கிழமையான 3வது நாளில் 23.65 கோடியாகவும் வசூல் அதிகரித்தது. இதனால் முதல் 3 நாட்களிலேயே 63.15 கோடி வசூலை பெற்றது. அதற்கு பிறகு திங்கட்கிழமை 21. 40 கோடி வசூலிக்கப்படும். செவ்வாய்க்கிழமை 12.85 கோடியாக குறைந்தது. புதன்கிழமை 8.05 கோடி, வியாழக்கிழமை 6.10 கோடி என வசூல் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கிறது.
மொத்த வசூல்
4 நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் 111. 55 கோடி நிகர வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தினசரி வசூல் குறைந்தாலும் வெளிநாட்டு வசூலும் சேர்ந்து படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. 7வது நாளில் வெளிநாடுகளில் 4 கோடி வசூலித்தது. இதன் மூலம் வெளிநாட்டு மொத்த வசூல் 71 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் மொத்த வசூல் 129.60 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் உலக அளவில் மொத்த வசூல் 200.60 கோடியை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
சீன் படத்துக்கு முதல் வாரத்தில் கிடைத்த வரவேற்பு நிச்சயம் பட குழுவுக்கு உற்சாகம் கொடுத்திருக்கும். ஆனால் தினசரி வசூல் குறைந்து வருவதால் 2வது வார கடைசியில் மீண்டும் வசூல் அதிகரிக்குமா? என்பதுதான் முக்கியமான கேள்வி. குறிப்பாக நாளை சனிக்கிழமை மற்றும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 2 நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சரி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications
