Dhurandhar OTT: ரன்வீர் சிங்க் நடித்த "துரந்தர்” ஓடிடி வெளியீடு எப்போது, எந்த தளத்தில்? வெளியான தகவல்
சென்னை: பாலிவுட் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவரும் நடிகர் ரன்வீர் சிங், இந்த முறையில் முழுக்க முழுக்க ஒரு ஸ்பை திரில்லர் கதையில் நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'துரந்தர் (Dhurandhar)'. திரையரங்குகளில் வெளியான இந்த படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அரசியல்-உளவு பின்னணியால் கவனம் பெற்ற நிலையில், தற்போது அதன் OTT வெளியீட்டு அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

OTT வெளியீட்டு விவரம்
'துரந்தர்' திரைப்படம் 2026 ஜனவரி 30ஆம் தேதி Netflix OTT தளத்தில் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியராக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரையரங்கில் படம் பார்க்க தவறியவர்கள் மற்றும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்கள், இந்த தேதியில் இருந்து Netflix-இல் படத்தை காணலாம். இந்தியாவைத் தவிர்த்து, சர்வதேச பார்வையாளர்களிடமும் இந்த படம் அதிக கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .
துரந்தர் கதை
'துரந்தர்' ஸ்பை த்ரில்லர் Spy Thriller கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உளவு அமைப்புகளுக்குள் நடக்கும் ரகசிய நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சதி திட்டங்கள், அவற்றை முறியடிக்க ஒரு திறமையான அதிகாரி மேற்கொள்ளும் ஆபத்தான பயணம் ஆகியவை கதையின் மையமாக அமைந்துள்ளன.
ரன்வீர் சிங் நடித்திருக்கும் கதாபாத்திரம், வெளிப்படையாக சாதாரண மனிதராக தோன்றினாலும், உள்ளுக்குள் ஒரு புத்திசாலித்தனமான உளவாளியாக இருக்கிறார். அரசியல் அதிகாரங்கள், சர்வதேச அழுத்தங்கள், நம்பிக்கை துரோகம் போன்ற பல சிக்கல்களுக்கிடையே அவர் எடுக்கும் முடிவுகளே படத்தின் திரில்லிங்கான தருணங்களை உருவாக்குகின்றன. எதிர்பாராத திருப்பங்களும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் 'துரந்தர்' படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது.
Tere Ishq Mein OTT: ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.. எதில், எப்போது பார்க்கலாம்?
இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பல முக்கிய பாலிவுட் நடிகர்கள் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். நடிகர்கள் தேர்வு, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வில்லன் கதாபாத்திரமும், அரசியல் பின்னணியில் வரும் பாத்திரங்களும் படத்திற்கு கூடுதல் வலுவாக அமைந்துள்ளன.
படத்தை இயக்கியிருப்பவர் ஆதித்யா தர். ஏற்கனவே தேசபக்தி மற்றும் ஆக்ஷன் கதைகளில் தனது திறமையை நிரூபித்துள்ள அவர், 'துரந்தர்' மூலம் இன்னும் ஒரு பெரிய அளவிலான ஸ்பை திரில்லரை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் எடிட்டிங் ஆகியவை படத்தின் வேகத்தை குறையாமல் கொண்டு செல்ல உதவியுள்ளதாக விமர்சனங்கள் கூறுகின்றன.
துரந்தர் படத்தின் உலகளாவிய மொத்த வசூல் தற்போது ₹870-₹900 கோடி சூழலில் உள்ளது. இது 2025-ஆம் ஆண்டின் மிக உயர்ந்த வசூல் படங்களில் ஒன்றாக உயர்ந்து வருகிறது. ரன்வீர் திங் கேரியரில் அதிக வசூல் பெற்ற படத்தில் இது இடம் பிடித்திருக்கிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
திரையரங்குகளில் வெளியானபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற 'துரந்தர்', தற்போது OTT-யில் வெளியாக உள்ளதால், இன்னும் அதிகமான ரசிகர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்பை திரில்லர் மற்றும் அதிரடி அரசியல் கதைகள் விரும்பும் ரசிகர்களுக்கு, இந்த படம் ஒரு முழுமையான அனுபவமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரன்வீர் சிங்கின் வித்தியாசமான நடிப்பு, விறுவிறுப்பான கதை, அரசியல் - உளவு பின்னணி ஆகியவற்றால் 'துரந்தர்' ஒரு முக்கியமான பாலிவுட் படமாக பார்க்கப்படுகிறது. 2026 ஜனவரி 30 முதல் Netflix-இல் வெளியாக உள்ள இந்த படத்தை, திரில்லர் ரசிகர்களுக்கு விருந்துதான்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications