Durandhar : ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் படத்திற்கு வந்த சிக்கல்.. ஓடிடியில் குறைக்கப்பட்ட நேரம்!
சென்னை: பாக்ஸ் ஆபிஸை அலறவைத்த ரன்வீர் சிங்கின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் படம் 'துரந்தர்', இப்போது எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு நள்ளிரவு சர்ப்ரைஸாக மாறியுள்ளது. திரையரங்குகளில் சாதனை வசூலை குவித்த இப்படம், தற்போது நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியிருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகி உள்ளது.

ஓடிடி வெளியீடு
படக்குழுவோ தயாரிப்பு நிறுவனம் தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு திடீரென 'துரந்தர்' நெட்ஃபிளிக்ஸில் ஸ்டீம் செய்யப்பட்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. "இது எதிர்பாராத சர்ப்ரைஸ்" என பலர் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
ஓடிடியில் குறைந்த நீளம்
ஆனால் படம் ஓடிடியில் வெளியானதும் இன்னொரு விவாதம் வெடித்துள்ளது. திரையரங்குகளில் 3 மணி 34 நிமிடங்கள் ஓடிய 'துரந்தர்', நெட்ஃபிளிக்ஸில் 3 மணி 25 நிமிடங்கள் மட்டுமே நினைவகத்தில் காட்டப்படுகிறது. அதாவது சுமார் 9 முதல் 10 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டிருக்கிறது.
இதனால்,"சில காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டதா?", "சென்சிட்டிவ் காட்சிகள் நீக்கப்பட்டதா?", "இது வெறும் டெக்னிக்கல் பிழையா?" என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. இதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் இல்லை என்பதால், குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
திரையரங்குகளில் 'துரந்தர்' படம் இந்தி மொழியில் மட்டும் வெளியானது. ஆனால் ஓடிடியில், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் படம் ஸ்ட்ரீம் ஆகிறது. இதனால் தென்னிந்திய ரசிகர்களும் அதிக அளவில் படத்தை பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஓடிடி வெளியீடு படத்தின் பார்வையாளர் வட்டத்தை இன்னும் விரிவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dhurandhar OTT: ஓடிடியில் வந்த துரந்தர் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! ரன்வீர் சிங்கின் மாஸ் அவதாரம்!
2025-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி வெளியான 'துரந்தர்', இந்தியாவில் மட்டும் ரூ.900 கோடியும், உலகளவில் ரூ.1350 கோடியும் வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. ஓடிடியில் வெளியான பிறகும், படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி வெளியீடு பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்குமா என்பது இன்னும் பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.

ரன்வீர் சிங்கின் மாஸ் கம்பேக்
இந்த படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. ஆக்ஷன், எமோஷன், உடல் மொழி என அனைத்திலும் அவர் முழு வீச்சில் செயல்பட்டிருப்பதாக விமர்சனங்கள் வந்தன. அவருக்கு ஜோடியாக நடித்துள்ள சாரா அர்ஜுன், தமிழில் 'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 'துரந்தர்' மூலம் அவர் பாலிவுட்டில் ஹீரோயினியாக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
திரையரங்குகளில் வசூல் சாதனை, ஓடிடியில் எதிர்பாராத வெளியீடு, அதோடு நீளம் குறைக்கப்பட்டதா என்ற சர்ச்சை - இந்த மூன்றையும் சேர்த்து, 'துரந்தர்' மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது.
இனி தயாரிப்பாளர்கள் இந்த ட்ரிம் விவகாரம் குறித்து விளக்கம் தருவார்களா, அல்லது ரசிகர்களின் கேள்விகள் அப்படியே தொடருமா என்பதே அடுத்த கட்ட எதிர்பார்ப்பு.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications