Lucky OTT : நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஜி.வி பிரகாஷின் படம்.. கதை இதுதானா? எதில் பார்க்கலாம்?
சென்னை: (GV Prakash Kumar Lucky OTT) தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக நீண்ட காலமாக கலக்கி வரும் ஜிவி பிரகாஷ், நடிகராகவும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கி வருகிறார். 'டார்லிங்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமூகப் பிரச்சனைகளை பேசும் கதைகள் முதல் த்ரில்லர், ரொமான்டிக், எமோஷனல் கதைகள் வரை வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிப்பதன் மூலம், நடிகராகவும் தன்னுடைய இடத்தை வலுப்படுத்தியுள்ளார்.

ஜி வி பிரகாஷ் படங்கள்
கடைசியாக 'பிளாக்மெயில்' படத்தில் நடித்திருந்த ஜிவி பிரகாஷ், தற்போது 'அடங்காதே', 'இடிமுழக்கம்', '13', 'மெண்டல் மனதில்', 'இம்மார்டல்', 'ஹேப்பி ராஜ்' உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ஒரே நேரத்தில் பல்வேறு ஜானர்களில் உருவாகும் படங்களில் நடித்து வருவது, நடிகராக அவர் எவ்வளவு பிஸியாக இருக்கிறார் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது.
லக்கி திரைப்படம்
இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'லக்கி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். 'சூப்பர் சரண்யா', 'திருவின்டே மனச்செங்கலி' போன்ற படங்களின் மூலம் மலையாள சினிமாவில் கவனம் பெற்ற அனஸ்வரா ராஜன், 'லக்கி' படத்தின் மூலம் தமிழிலும் முக்கியமான அறிமுகத்தைப் பெறுகிறார். இப்படத்தை கந்தசாமி - புஷ்பா கந்தசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். உதய் மகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் எமோஷன் மற்றும் ஃபீல்-குட் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
லக்கி படத்தின் கதை
'லக்கி' படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், சிறப்பு சக்தியுள்ள ஒரு நாய்குட்டியை மையமாக வைத்து கதைக்களம் அமைந்துள்ளது. மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசம், அதனால் உருவாகும் மாற்றங்கள், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எனும் பெயரில் நடக்கும் சில எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை இந்த படத்தின் மையமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நேரடி ஓடிடி ரிலீஸ்
சமீப காலமாக விலங்குகளை மையமாக வைத்து உருவாகும் கதைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், 'லக்கி' படம் அந்த வரிசையில் கவனம் ஈர்க்கும் படமாக பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் இந்த படம், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகுவதால், இந்திய அளவில் பரவலான ரசிகர்களை இந்த படம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குடும்பத்தோடு பார்க்க ஏற்ற வகையிலான படமாக 'லக்கி' இருக்கும் என்பதால், ஓடிடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக வெற்றிகரமாக மாறியவர்களில் முக்கியமான ஒருவராக ஜிவி பிரகாஷ் பார்க்கப்படுகிறார். இசையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், நடிப்பிலும் இடைவிடாது படங்களை தேர்வு செய்து வருவது, அவரது பல்துறை திறமையை வெளிப்படுத்துகிறது.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது தான் தனது பலம் என அவர் பல நேர்காணல்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் 'லக்கி' படம் மூலம் குடும்ப ரசிகர்களையும் குழந்தைகளையும் கவரும் ஒரு புதிய முயற்சியில் ஜிவி பிரகாஷ் களம் இறங்கியுள்ள நிலையில், இந்த படம் அவரின் நடிப்பு பயணத்தில் இன்னொரு முக்கியமான கட்டமாக அமையும் என சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications