Thalaivar Thambi Thalaimai OTT: ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஓடிடி ரிலீஸ்.. எப்போது பார்க்கலாம்? லீக்கான தகவல்
சென்னை: பொங்கல் 2026 ரேஸில் பெரிய ஆச்சரியமாக மாறிய படம் என்றால், ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' தான் என்று சொல்லலாம். மலையாள இயக்குநர் நிதீஷ் சஹாதேவ் இயக்கத்தில் நையாண்டி கலந்த அரசியல் கதையாக உருவான இந்த படம், ஜனவரி 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்ப்பை மீறி நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்தப் படத்தில் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற தேடல் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. அது பற்றி சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது
"ஜீவாவுக்கு இப்படி ஒரு கம்பேக் வரும்னு யாரும் நினைக்கல"ன்னு சொல்வதுதான் இப்போ சினிமா வட்டாரங்கள்ல பேசுற விஷயம். ஏனெனில், படம் வெளியான முதல் 6 நாட்களிலேயே இந்தியாவில் ரூ.20 கோடியை கடந்ததும், உலகளவில் ரூ.25 கோடி வசூல் எட்டியதும் பெரிய சர்ப்ரைஸ். இதே வேகம் தொடர்ந்தா, முதல் 10 நாட்களுக்குள் ரூ.50 கோடியை தொட்டுவிடும் வாய்ப்பு அதிகம்னு சொல்லப்படுது.

அதே நேரம், 'திரௌபதி 2', 'ஹாட் ஸ்பாட் 2' மாதிரி புதிய படங்கள் வர்றதால, வசூல் வேகம் கொஞ்சம் ஸ்லோ ஆகுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. படத்தின் கதையும் ரசிகர்களை கவர்ந்த முக்கிய காரணம். ஒரு சிறிய நகரத்தை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஜீவரத்னம் (ஜீவா) வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு திருமண நிகழ்வு எப்படி பெரிய அரசியல் குழப்பமாக மாறுகிறது என்பதுதான் கதை.
நையாண்டி, அரசியல் விமர்சனம், எமோஷன் எல்லாமே கலந்திருக்குறதால படம் குடும்ப ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகி இருக்கு. தம்பி ராமையா, இளவரசு, மீனாட்சி தினேஷ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பும் படத்துக்கு நல்ல பலம்.
இப்போ திரையரங்குகளில் நல்ல ஓட்டம் ஓடிக்கிட்டிருக்கும் இந்த நிலையில், ரசிகர்களிடையே இன்னொரு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. "இந்த படம் ஓடிடியில் எப்போ வரும்?"ன்னு தான் அந்த கேள்வி. குறிப்பாக திரையரங்கில் பார்க்க தவறியவர்கள், குடும்பத்தோட சேர்ந்து ஓடிடியில் பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறாங்க.

சினிமா வட்டாரங்களில் கிடைக்குற தகவல்படி, 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் தோராயமாக மார்ச் 6ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை, வழக்கமான திரையரங்கு-ஓடிடி இடைவெளியை கணக்கில் எடுத்தா, இந்த தேதி தான் அதிகம் பேசப்படுகிறது. எந்த ஓடிடி தளம் என்பது குறித்த அறிவிப்பு கூட விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
மொத்தமாக பார்க்கும்போது, திரையரங்குகளில் எதிர்பாராத வெற்றி, வசூலில் நல்ல ஓட்டம், அதனைத் தொடர்ந்து ஓடிடி ரிலீஸ் எதிர்பார்ப்பு - எல்லாமே சேர்ந்து 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை பொங்கல் 2026-ன் பேசப்படும் படமாக மாற்றியிருக்கிறது. மார்ச் மாதத்தில் ஓடிடியில் வந்ததும், இந்த படம் இன்னும் பெரிய ரசிகர் வட்டத்தை அடையும் என்ற நம்பிக்கையும் சினிமா வட்டாரங்களில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications