புற்றுநோயை வெல்ல.. நவீன சிகிச்சையின் 66- ஆண்டுகால நம்பிக்கை ஜி.கே.என்.எம் மருத்துவமனை!
கோவை: புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ந் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோய்க்கு கோவையில் உள்ள ஜி குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் (ஜி.கே.என்.எம்.) உள்ள வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையத்தில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புற்றுநோயை வெல்ல நவீன சிகிச்சையின் நம்பிக்கையாக ஜி.கே.என்.எம். உள்ளது.
தென் இந்தியாவில் உள்ள தலைசிறந்த புற்றுநோய் சிகிச்சை மையங்களில் ஒன்றாக திகழும் ஜி குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் கடந்த 1958ம் ஆண்டில் நிறுவப்பட்ட வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இங்கு பலதரப்பட்ட புற்றுநோய்க்கான தீர்வை ஒரே கூரையின் கீழ் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேல் கொடுத்து வருகிறது.

1. Advanced Robotic Surgical System
குறுகிய கால இடைவெளியில் புற்றுநோய்க்கு வெளிநாடுகளிலும், நம் நாட்டில் முக்கிய பகுதிகளில் உபயோகிக்கப்படும் அதிநவீன உபகரணங்களை கோவைக்கு அறிமுகம் செய்தது. இங்கு ஆரம்ப கட்டத்தில் இருந்து இப்போது வரை புற்று நோய் சிகிச்சையில் பிரசித்தி பெற்ற நிபுணர்கள் மூலம் தரமான, சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
பின்னர் திறமை மிக்க கதிர்வீச்சு நோயியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள், பேலியேட்டிவ் மற்றும் ஹோம் ஹெல்த் மருத்துவ நிபுணர்கள் என ஒருங்கிணைந்த புற்றுநோய் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

2. PET CT SCANNER with Time of Flight & Flow Motion Technology
கோவை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் புற்றுநோய் பரிசோதனை முகாம்கள்மூலம்புற்றுநோயை தடுக்கவும், முன்கூட்டியே கண்டறியவும் இந்த மையம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இங்கு மூளை, வாய் மற்றும் தொண்டை, மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், ரத்தவியல், மார்பகம், சார்க்கோமா, இரப்பை குடல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு நவீன கருவிகளின் உதவியுடன் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புற்றுநோயை எளிதாக வெல்லலாம்: புற்றுநோயியல் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் பா.சிவநேசன். பொதுவாக புற்றுநோயை தொந்தரவு இல்லாமல் கண்டுபிடிப்பது கடினம். கை, கால், மார்பகம் உள்ளிட்ட இடங்களில் கட்டி வந்து, அது வளர்ந்து கொண்டே வந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறி ஆகும். வாய்ப்பகுதி, தோல் பகுதியில் புண் வரும். சாதாரண புண் என்றால் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் குணமாகிவிடும்.

3. GKNM iOP (Asia's Largest Integrated Out-Patient Centre in Coimbatore)
ஒரு மாதத்துக்கும்மேல் அந்த புண் இருந்தால், அது கேன்சராக இருக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு உரிய பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும். அதுபோன்று உடலில் எந்த பகுதியில் ரத்தம் வெளியேறுவது, மலத்துடன் ரத்தம் வந்தால் அது கேன்சராக இருக்கலாம்.
அத்துடன் குரலில் மாற்றம் தெரிவது, சாப்பிடும்போது அடைப்பு இருப்பது. சாதா இருமல் என்றால் 10 நாட்களுக்குள் குணமாகிவிடும். ஒரு மாதத்துக்கும் மேல் இருமல் இருந்தால் நுரையீரல் கேன்சராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

4. Linear Accelerator
ரத்த புற்றுநோய், உறுப்புகளில் வருவது என்ற 2 வகையான கேன்சர்கள் இருக்கிறது. மூளை, வாய், தொண்டை, காது, உணவுக்குழாய், தைராய்டு, இரைப்பை, கணையம், கல்லீரல், கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய், குடல், மலக்குடல், ஆசனவாய் எலும்பு, என்று தலை முதல் பாதம் வரை உள்ள அனைத்து உறுப்புகளிலும் கேன்சர் வர வாய்ப்பு உள்ளது. 40 சதவீதம் வரை உள்ள கேன்சருக்குதான் காரணம் தெரியும். மீதமுள்ள 60 சதவீத கேன்சருக்கு எந்த காரணமும் தெரியாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த 40 சதவீதத்தில் புகையிலை, புகைப்பிடிப்பதால்வருகிறது. வைரஸ் பாதிப்பு வந்தாலும் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.
20 சதவீதம் பாரம்பரியமாக வர வாய்ப்பு உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எச்.பி.வி. தடுப்பூசி உள்ளது. இதை திருமணமாகாத முன்பு இளம்பெண்கள் போட்டுக்கொள்ள வேண்டும். 3 முறை போட வேண்டும். இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டால் பெரும்பாலும் இந்த வகையான புற்றுநோய் வருவதை தடுக்கலாம். அத்துடன் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கவும் தடுப்பூசி உள்ளது.

5. HDR Brachytherapy Unit
புற்றுநோய் ஆரம்ப நிலையில் பாதிப்பு இருந்தால் அதை முற்றிலும் குணமாக்கிவிடலாம். கேன்சரில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. முதல் நிலையில் இருந்தால் 95 சதவீதம் குணமாக்க முடியும். 2வது நிலையில் இருந்தால் 70 முதல் 80 சதவீதம் வரை குணமாக்கலாம். 3வது நிலையில் இருந்தால் 40 முதல் 60 சதவீதம் வரை குணமாக்கலாம். 4வது அதாவது கடைசி நிலையில் இருந்தால் 10 சதவீதம் மட்டுமே குணப்படுத்த முடியும்.
வயிற்றுக்குள் இருக்கும் கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது கடினம்தான். ஏதாவது சிறிய தொந்தரவு, ஒரு மாதத்துக்கும் மேல் இருக்கும்போது அதற்கு பரிசோதனை செய்து கொண்டால் உடனடியாக கண்டுபிடிக்க முடியும்.
அதற்காகதான் நாங்கள் அடிக்கடி சொல்வது, உடலில் எந்த இடத்திலும் வழக்கத்துக்கு மாறாக கட்டி இருந்தாலும், அதில் வலி ஏற்படவில்லை என்றாலும் உடனடியாக வந்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கட்டி இருந்து அதில் புண் வந்துவிட்டால் புற்றுநோயின் நிலை மாறிவிடுகிறது. பின்னர் அதற்கு சிகிச்சை கொடுத்தாலும் குணமாவது குறைவுதான்.

6. Bone Marrow Transplant Unit
அல்சர், கட்டி, சாப்பிட முடியவில்லை, எடை குறைந்து வருதல், ரத்தக்கசிவு இருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் பெரும்பாலானோர் 3வது அல்லத 4வது நிலையில்தான் புற்றுநோயால் பாதித்து வருகிறார்கள். எனவே அதற்கான விழிப்புணர்வு கண்டிப்பாக பொதுமக்களிடம் தேவை.
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ஜி.கே. என்.எம். மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது. லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை, ரோபோடிக் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் அதிநவீன கருவிகள், ஹீமோதெரபி உள்ளிட்ட தெரபிகள், ரத்த புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை, குழந்தைகளுக்கான நவீன சிகிச்சை உள்பட பல சிகிச்சைகள் இந்த ஆஸ்பத்திரியில் கொடுக்கப்படுகிறது.
கவுன்சிலிங்கிற்கு தனி குழு: புற்றுநோய்க்கு அளிக்கும் சிகிச்சையில் பல பரிணாமங்கள் உள்ளன. அவற்றில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதில் இருந்து, நோயாளிக்கு பல சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை வழங்க ஈடுபடும் வரை பல பிரிவுகளை உட்புகுத்தி கட்டமைத்து உள்ளோம். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும் ஆதரவு கொடுக்க வேண்டும். அதற்கான கவுன்சிலிங் கொடுக்கும் தனிக்குழுவும் இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்: குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்களில் 40 முதல் 50 சதவீதம் ரத்தம் தொடர்பானவை. இதுபோன்று பெரியவர்களுக்கு வருவதுபோல் இவர்களுக்கு கட்டி தொடர்பான புற்றுநோய் மூளை, வயிறு, எலும்புகளில் வரலாம். குழந்கைதளுக்கு வரக்கூடிய புற்றுநோய்களுக்கு காரணங்கள் இல்லை. அவர்களுக்கு பிறவியில் இருந்தே புற்றுநோய் இருக்காது. திடீரென்றுதான் வெளிப்படும்.மூளையில் இருந்தால் தலைவலி, வாந்தி, கை, கால் செயல்பாட்ல் தளர்வு, சில நேரத்தில் பக்கவாதம் இப்படி தெரியும். சில புற்றுநோய்களுக்கு உடல்வலி, சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய் வீரியம் கொண்டவை. அதே நேரத்தில் அவை அறுவை சிகிச்சைக்கு நன்கு பிடிகொடுக்கும். குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, விளைவுகள் அதிகநாட்கள் இல்லாதவாறு அவர்களுக்கு சிகிச்சை முறையை திட்டமிட்டு வழங்க வேண்டும்.
கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை
த.பெ.எண் - 6327
நேதாஜி சாலை,
பாப்பநாய்க்கன்பாளையம்,
கோயம்புத்தூர் - 641 037
தமிழ் நாடு
முன்பதிவுக்கு: 0422-430 5300
இணையதளம்: www.gknmhospital.org
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications