Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புற்றுநோய் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்படுகிறது தங்கம் மருத்துவமனை… நாமக்கல் கலெக்டர் உமா புகழாரம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தங்கம் மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் தன்னார்வலர்களுக்கு பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் உள்ள அரங்கில் நடைபெற்றது. தங்கம் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனரும் மருத்துவருமான இரா.குழந்தைவேல் தலைமை தாங்கினார். மருத்துவர் மல்லிகா குழந்தைவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, கரூர் வைசியா வங்கியின் சி ஆர் எஸ் தலைமை அதிகாரி வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Namakkal Hospital

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பேசும்போது,நன்றி மறப்பது நன்றல்ல என்ற முதுமொழிக்கேற்ப பயனாளிகளுக்கும், நோயாளிகளுக்கும் நல்ல தரமான மருத்துவம் கிடைக்க நன்கொடை அளித்த அனைவரையும் பாராட்டுவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் வைசியா வங்கியின் சி எஸ் ஆர் , கரூர் வைசியா வங்கியின் மேலாளர், தங்க மருத்துவமனையின் தலைவர் மருத்துவர். குழந்தைவேல், மருத்துவர். மல்லிகா மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தலின் போது தேர்தல் பணிக்காக வந்த அலுவலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்கான மருத்துவ சிகிச்சையை தங்கம் மருத்துவமனையில் சிறப்பாக வழங்கினர்.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியருக்கு புற்றுநோய் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவமனை தங்கம் மருத்துவமனை. இப்படி நாடு முழுவதிலும் இருந்து பலராலும் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் சிறந்த மருத்துவமனை நாமக்கல் தங்கம் மருத்துவமனை. நோயாளிகளை google போன்றவற்றில் தேடி மருத்துவத்தை பற்றிய விவரங்களை கேட்கும் காலம் இது. மருத்துவமனையின் தலைமை மற்றும் சரியாக இருந்தால் போதாது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்கும் மருத்துவ பணியாளர்களும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை பேரும் முக்கியம்.

அந்த வகையில் இந்த தங்கம் மருத்துவமனை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையின் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என் நாமக்கல் மாவட்டத்தில் வாழும் மக்கள் அனைவரும் என்னுடைய மக்கள். அவர்களுக்கு தேவையான திட்டங்கள் எளிய முறையில் சென்று சேர வேண்டும். எனக்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது வாட்ஸ் அப்பில் செய்தியோ அனுப்பினால் போதும். எனக்கு துணையாக உள்ள 7 பேர் குழு உடனடியாக அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் அலுவலர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் அனைவரும் கடின உழைப்பாளிகள். மிகவும் சிக்கனமாக செலவு செய்பவர்கள். எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் எந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து உழைக்கின்றனர். நாமக்கல் போன்ற நடுத்தர மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையை நிறுவி அதை மிகச் சிறந்த சிகிச்சை அளித்து வெளிநாட்டில் இருந்து கூட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் மருத்துவர் குழந்தைவேல் மிகச் சிறப்பான முறையில் அதை நடத்தி வருகிறார்.

என்னுடைய சொந்த மாவட்டம் தூத்துக்குடியில் இவ்வளவு தன்னம்பிக்கையான ஆட்களோ வழி நடத்துபவர்களோ இல்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம். எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு இந்த மாவட்டத்து மக்கள் பள்ளிகளுக்கு கழிவறை கட்டித் தருதல் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் தருதல் போன்றவற்றைச் செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் .என் மாவட்டத்து அரசியல்வாதிகளும் கட்சி பேதமின்றி நன்கொடை அளிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் .மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு 2008 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. அரசின் நோக்கமே மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்பதுதான்.

பொதுமக்களுக்கு தங்களது உடல் நிலையை குறித்த விழிப்புணர்வு அவசியம்.வருடம் ஒருமுறை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயதுக்கு மேல் வரும் அனைவருக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.ஆனால் எல்லோரும் இந்த பரிசோதனையை செய்துதான் ஆக வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது. எனவே அதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதை முன்னெடுத்து இருக்கும் தங்கம் மருத்துவமனைக்கு வாழ்த்துக்கள் என பெருமைப்படுத்தினார்.

இதை தொடர்ந்து மருத்துவர் தீப்தி மிஸ்ரா புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் இலவச மார்பக புற்றுநோய் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தி வருகிறோம். இம்மருத்துவமனைக்கு வடமாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற வந்து கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும் ஆண்டுதோறும் மார்பகத்தை 3 விரல் 3 நிமிடம் 3 நாள் லேசான அழுத்தம் கொடுத்து வந்தாலே அதனை சீர்படுத்தி விடலாம்.

பல வகைகளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் தந்தும் பெண்கள் பலரும் மருத்துவமனை வருவதில்லை. பெண்கள் தாங்களாகவே முன்வந்து மார்பக புற்றுநோய் குறித்து அறிந்து கொள்ளலாம். எளிமையான வகையில் அதற்கான திட்டங்களை தந்துள்ளோம். இந்தியாவில் 360 க்கு மேல் மருத்துவமனைகள் இருந்தாலும் ஒரு நடுத்தர ஊரான நாமக்கல்லில் இது போன்ற ஒரு சிறந்த மருத்துவமனை வேறு எங்கும் இல்லை.

தங்கம் மருத்துவமனை சார்பில் கடந்த மாதத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு மெமோகிராம் பரிசோதனை செய்து பார்த்ததில் 60க்கும் மேற்பட்டோருக்கு கட்டிகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தங்கம் மருத்துவமனையில் மட்டும் ரேடியாலஜி சிகிச்சைக்கென பெண் மருத்துவர் உள்ளார். தொடர்ந்து நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாத்து வருவதில் நம் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

Namakkal Hospital

பின்னர் மருத்துவர் சரவணன் ராஜமாணிக்கம் பேசுகையில், இந்த மாதம் நுரையீரல் மாதம் என்பதால் தொடர்ந்து நுரையீரல் குறித்த விழிப்புணர்வும், அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறோம். இந்தியா மட்டுமில்லாது உலக அளவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் என்பது குறைந்து தான் காணப்படுகிறது. உலக அளவில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறப்பு அதிகரித்துள்ளது. அதில் டில்லி, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசுபட்டு அதனால் நுரையீரல் புற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புகையிலை பிடிப்பவர்களுக்கு மட்டும் இந்நோய் வருகிறது என்ற நிலை மாறி சுகாதாரம் அற்ற காற்றினால் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதில் 40 சதவீதம் பேருக்கு புகைப்படங்கள் இல்லாதவர்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை நுரையீரல் ஸ்கேனிங் செய்து அவசியம் பார்க்க வேண்டும் என்று பேசினார்.

கரூர் வைசியா வங்கி சி எஸ் ஆர் தலைமை அதிகாரி வைத்தியநாதன் பேசுகையில், கரூர் வைசியா வங்கி சார்பில், நாமக்கல் தங்க மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையின் கீழ் 100 பேருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை பெற நிதியுதவி ரூ. 75 லட்சம் வழங்கி உள்ளோம். மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தனியாக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் திறம்பட பணியாற்றி மருத்துவமனைக்கு உதவியாக இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய நாமக்கல் தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் இரா.குழந்தைவேல், எண்ணங்கள் தூய்மை, பொறுமை, நிதானம், விடாமுயற்சி ஆகிய மூன்றும் இருந்தால் வெற்றி அடையலாம் என்பதற்கு அடையாளமாக நாமக்கல் தங்க மருத்துவமனை செயலாற்றி வருகிறது. இங்கு சிகிச்சை பெற வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு நாமக்கல்லில் உள்ள பெருங் கொடையாளர்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். வெளிமாநில மற்றும் வெளிநாட்டவர்கள் 58 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தன்னலம் கருதாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதுவே இம் மருத்துவமனைக்கு சிறந்ததொரு சான்றாகும். மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளையும் மேலும் தன்னார்வலர்களின் நிதி உதவிகளைக் கொண்டு ஏழை எளியவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்று பேசினார். இறுதியாக மருத்துவர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+