ஒரே மாதத்தில் 3,500 ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கியது மத்திய அரசு!
டெல்லி: நாடு முழுவதும் கடந்த மாதத்தில் மட்டும் 3,500 குழந்தைகள் சார்ந்த ஆபாசப்பட இணையதளங்களை முடக்கியுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் ஆபாசப்படங்களை பார்த்து கெட்டுப்போவதாக தொடரப்பட்ட பொது நல வழக்கு நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் ஆபாசத் தளங்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகளைப் பொருத்துமாறு சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் தெரிவித்தார்.
மேலும், பள்ளிப் பேருந்துகளில் ஜாமர்களைப் பொருத்துவது சாத்தியமற்றது. சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் ஆபாசத் தளத்தின் பயன்பாட்டைத் தடுக்க ஜாமர் கருவிகளைப் பொருத்த முடியுமா என்றும் கூறிய அவர், கடந்த மாதத்தில் மட்டும் 3,500 குழந்தைகள் சார்ந்த ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இரண்டு நாட்களுக்குள் குழந்தைகள் ஆபாச தளங்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications