திருமண ஜோதிடத்தில் ராசி பொருத்தத்துடன் சேர்த்து மிக முக்கியமாக கவனிக்கப்படுவது ராசி அதிபதி பொருத்தம் ஆகும். 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளாகப் பிரிந்து, ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனி கோள் அதிபதி இருப்பார். இந்த கோள்கள் ஒருவருடன் ஒருவர் நட்பு, சமம், பகை நிலையிலிருக்கின்றன என்பதே ஜோதிடத்தின் அடித்தளக் கோட்பாடுகளில் ஒன்று.
| கோள்கள் | நட்பு | சமம் | பகை |
|---|---|---|---|
| ஞாயிறு | செவ்வாய், நிலவு, வியாழன் | அறிவன் (புதன்) | வெள்ளி (சுக்), காரி (சனி) |
| நிலவு | ஞாயிறு, அறிவன் (புதன்) | செவ்வாய், வியாழன், வெள்ளி (சுக்), காரி (சனி) | |
| செவ்வாய் | நிலவு, ஞாயிறு, வியாழன் | வெள்ளி (சுக்), காரி (சனி) | அறிவன் (புதன்) |
| வியாழன் | செவ்வாய், ஞாயிறு, நிலவு | காரி (சனி) | வெள்ளி (சுக்), அறிவன் (புதன்) |
| வெள்ளி (சுக்) | அறிவன் (புதன்), காரி (சனி) | செவ்வாய், வியாழன் | ஞாயிறு, நிலவு |
| அறிவன் (புதன்) | ஞாயிறு, வெள்ளி (சுக்) | ஞாயிறு, வெள்ளி (சுக்) | நிலவு |
| காரி (சனி) | வெள்ளி (சுக்), அறிவன் (புதன்) | வியாழன் | செவ்வாய், ஞாயிறு, நிலவு |
| இராசி | அதிபதி | தன்மை |
|---|---|---|
| மேஷம், விருச்சிகம் | செவ்வாய் | நிலம், ஆற்றல், திறமை |
| ரிஷபம், துலாம் | வெள்ளி (சுக்) | வாழ்வு மகிழ்ச்சி |
| மிதுனம், கன்னி | அறிவன் (புதன்) | கல்வி, அறிவாற்றல் |
| கடகம் | நிலவு | மனம், அன்பு, அம்மா |
| சிம்மம் | ஞாயிறு | உடல், வழி நடத்துதல், தந்தை |
| தனுசு, மீனம் | வியாழன் (குரு) | செல்வம், குழந்தை |
| மகரம், கும்பம் | காரி (சனி) | ஆயுள், தொழில் |