மீனாட்சி உயர் கல்வி நிறுவனத்தில்.. சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்! மருத்துவ அறிஞர்கள் பங்கேற்பு
சென்னை: சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16th Feb 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடத்தியது.
இந்த கருத்தரங்கில் இந்திய அளவிலும் உலக அளவிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எமோரி யூனிவர்ஸிடியின் அடிப்படை மற்றும் செயல்முறை ஆராய்ச்சி மையத்தின் துணை அதிபரான டாக்டர். கியூடோ சில்வெஸ்டரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி வேந்தரின் தற்போதைய ஆலோசகராகவும் இருக்கும் டாக்டர்.S. P. தியாகராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தரான டாக்டர். C. ஸ்ரீதர், தொற்று நோய்களாலும் மற்றும் தொற்றா நோய்களாலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சுட்டிக் காட்டி இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கான தேவையையும் நோக்கத்தையும் தெளிவுரைத்தார். இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான வேந்தர் திருமதி. ஜெயந்தி இராதாகிருஷ்ணன், தலைமை புரவலர் திருமதி. கோமதி இராதாகிருஷ்ணன் மற்றும் சார்பு வேந்தர் திரு. ஆகாஷ் பிரபாகர் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையை பற்றியும் அறிவியல் வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளை நடத்த அவர்களின் முனைப்பைப் பற்றியும் அடிகோடிட்டார்.
இந்த கருத்தரங்கம் நான்கு அறிவியல் அமர்வுகளை உள்ளடக்கியது. அதில் 14 அறிவியல் வல்லுநர்கள் தங்கள் அறிவியல் கருத்துகளை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். எய்ட்ஸ், காச நோய், வைரஸ் சார்ந்த புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்க தடுப்பு ஊசி தயாரிப்புகளில் இன்று நடக்கும் ஆராய்ச்சிகளை பற்றியும் அதை சார்ந்த மரபணு மாற்றங்களை பற்றியும் இந்த கருத்தரங்கில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை நடத்தியதன் மூலம் மருத்துவ கல்வியிலும், ஆராய்ச்சியில் உள்ள புதுமைகளை அறிவதிலும், உலக அறிவியல் ஈடுபாடுகளிலும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்புகள் வெளிப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்











Click it and Unblock the Notifications