ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து விளையாடுவதே மிகப்பெரிய வெற்றி.. ஈஷா கிராமோத்சவம் பற்றி சத்குரு பெருமிதம்
கோவை: ஈஷா சார்பில் நடத்தப்பட்டு வரும் கிராமோத்சவம் திருவிழாவில் மக்கள் ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து விளையாடுவதே ஒரு பெரிய வெற்றி என சத்குரு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய அளவில் நடத்தப்பட்ட 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். குறிப்பாக, கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து சத்குரு அளித்துள்ள பேட்டியில், "கிராமோத்சவம் திருவிழா வெற்றிகரமாக நடந்துள்ளது. 25,000 கிராமங்களில் இருந்து 60,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இது ஒரு மகத்தான இயக்கமாக நடந்துள்ளது. இது வெறும் போட்டிக்காக மட்டும் அல்ல, எல்லோரையும் ஒன்றிணைக்கும் கருவியாக இதனை நடத்தியுள்ளோம்.

குறிப்பாக, கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்தது. இதுவே மிகப்பெரிய வெற்றி தான். வாழ்க்கையில் ஒரு விளையாட்டுத்தனம் வேண்டும். இல்லையென்றால் நம் வாழ்க்கையை வாழ்வதே மிகப்பெரிய சுமை போல ஆகிவிடும். இதனால் தான் பல விதமான மன நோய்கள் நமக்கு வருகின்றன. இதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் விளையாட்டுத்தன்மை வேண்டும்.

நாம் செய்யும் தொழிலில், குடும்பத்தில் ஒரு விளையாட்டுத்தன்மை வேண்டும். இதற்காகத்தான் இந்த கிராமோத்சவம் திருவிழா உற்சாகமாக நடக்கிறது. இந்த உற்சாகம் எல்லோருக்கும் வர வேண்டும். நமது கிராமங்களில் மக்கள் ஏழ்மையால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அந்த வலிகளை தாண்டிப் போக வேண்டும் என்றால் ஒரு விளையாட்டுத்தனம் ரொம்ப அவசியமானது.

இது நம் கலாச்சாரத்தில் இருந்தது. எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதில் ஆட்டம் பாட்டம் எல்லாமும் இருந்தது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு மாடு போல வேலை செய்கிறோம். இதனால் ஆனந்தமில்லாமல் கிராம மக்கள் கஷ்டப்படுகிறார்கள். நம் நாட்டில் மக்களிடையே கொண்டாட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இதனை மீண்டும் செயல்படுத்தியுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.






-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications