Soft Chapati: சாஃப்ட்டான சப்பாத்தி வேண்டுமா? கோதுமையுடன் இந்த ஒரு பொருளை சேருங்க!
How to get soft Chappathis: வீட்டில் சப்பாத்தி செய்தால் வறட்டி போன்று வருகிறதா? என்னதான் மாவு பிசைந்தாலும் ஒன்று சப்பாத்தி தேய்க்கும் கல்லிலேயே ஒட்டி கொள்கிறது. இல்லாவிட்டால் கடினமாக தேய்க்கும் நிலை ஏற்படுகிறதா? கவலையைவிடுங்கள் இனி இந்த ஒரு பொருள் போடுங்கள போதும்!
கோதுமை, மைதாவில் சப்பாத்திகளை செய்யலாம். கோதுமையில் செய்தால் உடல் எடை கூடாது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறையும்.

வயதானவர்கள் இரவு நேரங்களில் சப்பாத்தி சாப்பிடுவதையே விரும்புவார்கள். காலையில் இட்லி, தோசை, மதியம் வெள்ளை சாதம், மீண்டும் இரவும் இட்லி தோசை என்றால் அது உடலுக்கு நல்லதல்ல. எனவேதான் இரவு நேரங்களில் சப்பாத்தி, கோதுமை தோசை, சம்பா கோதுமை உப்புமா உள்ளிட்டவைகளை செய்கிறார்கள்.
ஒரு சிலர் கோதுமை மாவை கடைகளில் வாங்குவார்கள். இதற்காக நிறைய நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் விருப்பமான நிறுவனத்தின் பாக்கெட்டை வாங்கிக் கொள்வார்கள். ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 72 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
கோதுமையாக வாங்கினால் ஒரு கிலோ 80க்கு விற்பனையாகிறது. ரேஷன் கடைகளில் 5 கிலோ கோதுமை இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த கோதுமையை வாங்கி சுத்தம் செய்து அரைக்க கொடுப்பார்கள்.
ஒரு பாக்கெட் மாவை வாங்குவதை விட ரேஷனில் கோதுமையாகவோ அல்லது கடைகளில் கோதுமையாகவோ வாங்கி அதை அரைக்கலாம். சிலருக்கு இப்படி அரைக்கும் போது சப்பாத்தி மிருதுவாக வரவில்லை என்கிறார்கள்.
மிருதுவான சப்பாத்திக்கு என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். முதலில் மாவில் தண்ணீர் ஊற்றி பிசையும் முன்பு சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விட வேண்டும். சிலர் சப்பாத்தி நிறத்திற்காக சிறிது சர்க்கரை சேர்ப்பார்கள்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக வரும் வரை பிசைந்து சிறிது நேரம் மூடிவைத்து ஊறவிடவும். பின்பு சப்பாத்தி மாவை நன்கு ஒரு அடித்து பிசைந்து சப்பாத்தி இட வேண்டும்.
இப்படி செய்தாலும் சிலருக்கு சப்பாத்தி வரவில்லை என்கிறார்கள். இதற்கு சூப்பரான டிப்ஸ் பார்க்கலாம். கோதுமையை வாங்கினால் அதை மட்டும் அரைக்கக் கூடாது, அத்துடன் சில தானியங்களை சேர்க்க வேண்டும்.
ஒரு கிலோ கோதுமைக்கு 100 கிராம் முதல் 150 கிராம் வரை வெள்ளை கொண்டைக் கடலை சேர்த்து சப்பாத்தி செய்தால் ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும். இத்துடன் 50 கிராம் சிறிய சோயா பீன்ஸ், 50 கிராம் மஞ்சள் மக்காசோளம் ஆகியவற்றை சேர்த்து வெயிலில் காயவைத்து அரைக்கலாம்.
இல்லாவிட்டால் கோதுமை, கொண்டைக்கடலையுடன் சிறிதளவு சிறுதானியங்களை கொஞ்சம் கொஞ்சம் தலா 50 கிராம் போல சேர்த்துக் கொண்டால் அது millet chappathi.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications