மட்டன் சுவையை மிஞ்சும் சோயா மிளகு வறுவல்! மீல்மேக்கர் பெப்பர் ப்ரை இப்படி செஞ்சு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

Spicy Mealmaker Pepper Fry Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரியான காய்கறி பொரியல்களைச் சாப்பிட்டு சலித்துவிட்டதா? அல்லது அசைவ உணவுகளின் சுவையை சைவத்தில் தேடுகிறீர்களா? குறிப்பாக புரதச்சத்து நிறைந்த உணவை ருசியாக சமைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இதோ உங்களுக்காகவே மட்டன் சுவையை மிஞ்சும் வகையில் காரசாரமான சோயா மிளகு வறுவல் ரெசிபி இங்கே உள்ளது. இது செய்வதற்கு மிகவும் எளிமையானது மட்டுமல்லாமல், ஆரோக்கியமானதும் கூட. உங்கள் மதிய உணவை இன்னும் ஸ்பெஷலாக மாற்ற இந்த ஒரு ரெசிபி போதுமானது.

இந்த சோயா மிளகு வறுவல் அல்லது மீல்மேக்கர் பெப்பர் ப்ரை செட்டிநாடு ஸ்டைலில் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படுவதால் இதன் மணம் வீடே மணக்கும். இதில் சேர்க்கப்படும் மிளகு மற்றும் சீரகம் செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். குறிப்பாக சோயாவில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் உடலுக்கு நல்ல வலிமையைத் தரும் என்பதால் இது ஒரு சத்தான தேர்வாகும்.

spicy soya chunks fry recipe

மதிய உணவிற்கு ரசம் சாதம் அல்லது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட இது ஒரு மிகச் சிறந்த காம்பினேஷன் ஆகும். மிகக் குறைந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஹோட்டல் ஸ்டைல் வறுவலை நீங்கள் தயார் செய்துவிடலாம். வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மீல்மேக்கர் (சோயா சங்ஸ்) - 1 கப்
  • பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

  • மிளகு - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் சோயா சங்ஸை போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • சோயா நன்கு ஊறியதும், குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை முழுவதுமாக பிழிந்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து குழைய வதக்க வேண்டும்.
  • பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாக்களின் வாசனை வரும் வரை கிளறவும்.
  • இப்போது பிழிந்து வைத்துள்ள சோயாவை சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
  • அரைத்து வைத்துள்ள மிளகுத் தூளைத் தூவி, சோயாவுடன் மசாலா நன்கு ஒட்டும் வரை பிரட்டி எடுத்து மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான சோயா மிளகு வறுவல் தயார்.

இந்த காரசாரமான சோயா மிளகு வறுவலை சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால் அதன் சுவை அபாரமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+