எத்தனை நாளானாலும் கெட்டே போகாத பால் ஒன்னு இருக்கு! தயாரிப்பது எப்படி?
சென்னை: உலகிலேயே கெட்டு போகாத பால் ஒன்னு இருக்கு! அது என்னன்னு தெரியுமா? தயவு செய்து தபால், கோபால், போபால், நேபால்(ள்)னு எதையாவது சொல்லாதீங்க! உண்மையிலேயே எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டே போகாதாம். அது என்ன பால்ன்னா கெஃபீர்!
பால், தயிர், மோர்ன்னா குறிப்பிட்ட நாளாச்சுன்னா கெட்டு போகாமல் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா? இது 3000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் நொதிக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வித பானம்!

இதை காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம், வீட்டிலேயே தயாரிக்கலாம். கெஃபீர் என்பது நல்ல பாக்டீரியாக்களும் ஈஸ்ட்களும் நிறைந்ததாம். சாதாரண தயிரை விட இதில் பல மடங்கு உடலுக்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்குமாம்.
இந்த பாலை தினமும் குடித்தால் வயிற்றில் இருக்கும் பாதி பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருப்பதால்தான் வியர்வை நாற்றம், வாய் துர்நாற்றம், வாயு வெளியேறும் போது அடிக்கும் கெட்ட வாடை போன்றவை உள்ளது.
மனசு சரியில்லாவிட்டால் முகம் காட்டிக் கொடுப்பதை போல் வயிறு சரியில்லாவிட்டால் மேற்கண்ட அறிகுறிகள் எல்லாம் தெரியவரும். அவற்றை இந்த கெஃபீர் குடிப்பதன் மூலம் சரி செய்யலாம் என்கிறார்கள். இந்த பால் கெட்டு போகாதாம்.
250 மில்லி பாலில் 9 கிராம் புரதம் இருக்கிறதாம். இதை குடித்தால் தோல் வறண்டு போகாமல் இருக்குமாம். இறந்த செல்களை நீக்கி முகமும் உடலும் பளபளப்பாக காட்சியளிக்கும். இதில் புரதம் நிறைந்திருப்பதால் முடி கொட்டுதல் நின்றுவிடும்.
இந்த பாலில் அதிக கால்சியம் சத்துக்கள் இருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நன்மையை அளிக்கும். இந்த பாலை தயாரிக்க கெஃபீர் தானியங்கள் தேவை. இதை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
20 கிராம் தானியம் 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 20 கிராமே இத்தனை விலை அதிகமாக என நினைக்காதீர்கள். ஒரு முறை வாங்கினால் வாழ்நாள் முழுவதும் இதை பயன்படுத்தலாம். இந்த தானியங்களை வாங்கி வைத்துக் கொண்டு காய்ச்சிய ஆட்டுப் பால் அல்லது மாட்டுப் பாலை ஆற வைத்து, அதில் கெஃபீர் தானியத்தை கலக்கலாம்.
ஒரு வேளை பாக்கெட் பால் என்றால் அதை காய்ச்ச தேவையில்லை. கெஃபீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாத்திரம் கண்ணாடி அல்லது நல்ல பிளாஸ்டிக் பாத்திரமாக இருக்கலாம்.
5 கிராம் கெஃபீர் தானியத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் 250 மில்லி ஆறிய பாலை ஊற்ற வேண்டும். பாத்திரத்தை டைட்டாக மூட கூடாது. இதில் நொதிக்கும் போது கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும். எனவே காற்றோட்டமான துணியால் மூடி வையுங்கள்.
இதை 12 முதல் 24 மணி நேரம் வரை நொதிக்க வையுங்கள். பின்னர் அந்த பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் முறை குடிக்கும் போது ஒரு நாளைக்கு கால் டம்ளர் மட்டும் குடியுங்கள்.
இந்த கெஃபீர் பால் ஜீரணத்திற்கும் கட் ஹெல்த்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் கால்சியம் விட்டமின் கே2 உள்ளிட்டவை உள்ளன. ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும். கொழுப்பை குறைக்கும்.
பொறுப்பு துறப்பு: காதில் கேட்டது, கண்களால் பார்த்ததை வைத்து கெஃபீரின் தகவல்களை கொடுத்துள்ளேன். உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனைகளின் பேரில் நடந்து கொள்ளவும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications