கிறிஸ்துமஸின் பின்னணியில்...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்களின் துயர் துடைக்க, இறைவன் மண்ணில் அவதரித்தார். பல அற்புதங்களை நிகழ்த்தினார். தம்மை சிலுவையில் அறைந்தபாவிகளையும் கருணை கூர்ந்து மன்னித்தார். இறந்த 7-ம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்து விண்ணுலும் ஏகினார். அவர் தான் இயேசு கிறிஸ்து.
இயேசு, கிறிஸ்தவர்களின் கடவுள். ஆனாலும் அவருக்கு சாதி மத பேதம் கிடையாது. இன்றும் பலர் சாதி மத பேதமின்றி இயேசு பிறந்த நாளானகிறிஸ்துமசை கொண்டாடி வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் விழாவைப் பற்றிய சில தகவல்களும், அதன் பின்னணி நிகழ்வுகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
கிறிஸ்துமஸ் என்பது உலகம் முழுதும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.
இயேசு அவதரித்த நாளே கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். இயேசு, டிசம்பர் மாதம் 25-ம் தேதிதான்பிறந்தாரா என்பது குறித்து சில சந்தேகங்களும் நிலவுகிறது. அவர் டிசம்பர் 25-ம் தேதிதான் பிறந்தார் என்பது குறித்து நிச்சயமாக யாரும் உறுதியாககூறுவதில்லை.
பண்டைய காலத்தில் டிசம்பர் மாதம் 25-ம் தேதி பெகன்கள் எனப்படும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், விருந்துண்டு கேளிக்கைகளில் ஈடுபடும்நாளாக இருந்ததால், அன்றைய தினம் விடுமுறை தினமாக இருந்தது. அவர்கள் இயேசுவையும் நம்புவதில்லை.
3-வது நூற்றாண்டின் போது ரோம் நகர பிஷப்பாக டெலஸ்போரஸ் என்பவர் இருந்தபோது டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடமுடிவு செய்யப்பட்டது. இது நடைபெற்றது கி.பி. 127 ஆண்டுக்கும் கி.பி. 139-ம் இடைப்பட்ட பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது,
இயேசுவின் பிறந்த நாள் குறித்து பல் வேறு கருத்துக்கள், மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவந்த நிலையில், ரோம் நகர சர்ச் டிசம்பர் மாதம் 25-ம் தேதியை கிறிஸ்து பிறந்ததினமாக கொண்டாடுவது என முடிவு செய்தது. இந்த முடிவு கி.பி. 310-ம் ஆண்டுஎடுக்கப்பட்டது.
பல தலைமுறைகளாக கீழை நாடுகளின் சர்ச்சுகளால் இது ஒப்புக்கொள்ளப்படாமல்இருந்தாலும் 5-ம் நூற்றாண்டில்தான் உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதல் கிறிஸ்துமஸ் எப்போது ?
5-ம் நூற்றாண்டில் கிறிஸ்து பிறந்த நாள் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரோம் நகரில்இயேசு பிறந்த தேதி, ஆண்டு குறித்து மீண்டும் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால்இதற்கு முன்பே இயேசுவின் சீடரான மத்தேயுவின் போதனைகளில் இயேசு, ஹீரோட்மன்னன் காலத்தில் பெத்தலஹேமில் பிறந்தார் என கூறியிருந்தார்.
ஹீரோட் மன்னர் இறந்ததற்கும் இயேசு கிறிஸ்து பிறந்ததற்கும் இடையே சில காலஇடைவெளி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எங்குமே இயேசு கிறிஸ்து எந்த ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடப்படவில்லை.அவர் ஏ.யு.சி. 747-ன் மத்திய பகுதியிலோ, அல்லது ஏ.யு.சி 749-ம் ஆண்டின்இறுதியிலோ பிறந்திருக்கலாம். (ஏ.யு.சி. என்பது அன்னா உர்பிஸ் காண்டிடா,அதாவது, ரோம் நகரம் உருவானதிலிருந்து கணக்கிடப்படுவது). கி.மு. 7-ம்நூற்றாண்டுக்கும், கி.மு. 5-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இயேசுபிறந்திருக்கலாம் என்பதே சரியான கணிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பெஜன்கள் விழா மார்ச் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது. அந்த நாளைகிறிஸ்தவர்கள், கேப்ரியல் தேவதை மேரிமாதாவை வந்து பார்த்த நாளாககொண்டாடுகிறார்கள். அதனுடன் 9 மாதங்கள் சேர்த்து டிசம்பர் மாதம் 25-ம் தேதிஇயேசு கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
தற்போது கிடைக்கும் பல தகவல்களின் படி கிறிஸ்துமஸ் முதலில் கொண்டாடப்பட்டவருடம் கி.பி. 534-ம் ஆண்டு என தெரியவந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications