நல்ல மீட்பர்

Subscribe to Oneindia Tamil

ஒரு நாள் ஒரு மதகுரு இயேசுவை மடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் வந்து வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றஈல் நான்என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார்.

Jesuss Explainationsஅதற்கு இயேசு ஆண்டவரின் சட்டங்களை போதிப்பவர் நீங்கள். அது என்ன கூறுகிறது என கேட்டார்.

மத போதகர் ஆண்டவரிடம் அன்பு செலுத்து. அவரை எப்பொழுதும் நினை. உனக்கு நெருங்கியவர்களை நேசி என கூறப்பட்டிருக்கிறது என்றார்.

இயேசு நீங்கள் அதன் படிசெயலாற்றுங்கள் என்றார்.

மத போதகர் யார் எனக்கு நெருங்கியவர்என கேட்கவும் இயேசு ஒரு கதை சொன்னார்.

ஜெருசலேமிலிருந்து ஜெரிக்கோவிற்கு ஒருவர் சென்று கொண்டிருந்தார். வழியில் கொள்ளையர்கள் அவரை வழிமறித்து அவரை அடித்து அவரிடமிருந்துபணங்களையும் பறித்து சென்றுவிட்டனர். அவர் பாதி இறந்த நிலையில் சாலையில் விழுந்து கிடந்த்தார்.

அப்போது அந்த வழியே வந்த மதகுரு அந்த மனிதனைக் கண்டு விட்டு அவனுக்கு உதவாமல் சாலையின் மறுபக்கம் வழியாக சென்றுவிட்டார்.

அதன் பின் கோவில் ஊழியன் ஒருவன் வந்தான். அவனும் மதகுரு போலவே சாலையை கடந்து சென்றுவிட்டான்.

Good Samaritanஆனால் அப்போது அந்த பக்கம் வந்த வழிப்போக்கன் அடிப்பட்டு கிடந்த மனிதனுக்கு முதலுதவி அளித்து அவரை ஒரு விடுதியில் சேர்த்தார். அதன் பின்அங்கிருந்து செல்லும் போது விடுதிக் காவலாளியிடம் இவரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இவருக்காக நீங்கள் செலவு செய்யும் பணத்தை நான்அடுத்த முறை வரும் போது தருகிறேன் என சொல்லிச் சென்றார்.

இந்தக் கதையை சொன்ன இயேசு மத போதகரிடம், இவர்களில் யார் அடிபட்டவருக்கு நெருங்கியவர் என கேட்டார்.

மதகுரு, அவருக்கு உதவிய வழிப்போக்கன்தான் என்றார்.

அதேபோல் கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவி செய்யுங்கள் அதுவே நெருங்கியவர்களுக்கு உதவும் வழி என இயேசு கூறினார்.

இழந்த மகனின் கதை (ஊதாரி மகனின் கதை)

இயேசு கிறிஸ்து பாவம் செய்தவர்கள், பாவத்தை உணர்ந்தால் எவ்வாறு மன்னிக்கப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணமாக மக்களுக்கு ஒரு கதைசொன்னார்.

ஒரு செல்வந்தனுக்கு இரு மகன்கள் இருந்தனர். அவர்களில் இளைய மகன் ஊதாரி. எதைப்பற்றியும் யோசிக்காமல் செலவு செய்து வந்தான். அவன்தந்தையிடம் தன் பங்கு சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டு தன் பங்கை பெற்றுச் சென்றுவிட்டான்.

அவனைச் சுற்றி தீய பழக்கங்கள் கொண்ட நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூலம் தீய வழிகளில் அனைத்து பணத்தையும் செலவழித்து ஏழ்மை நிலைக்குதள்ளப்பட்டான்.

பசி அவனை வாட்டியது. சாப்பிட வழியில்லை. அவன் சம்பாதிப்பதற்காக பன்றிகள் பண்ணைக்கு வேலைக்குச் சென்றான். பசியைப் போக்கிக் கொள்ளஅவன் பன்றிகளுக்கு கொடுக்கும் உணவை சாப்பிட கூட அவன் தயாராக இருந்தான்.

Bellஅவன் தந்தையின் நல்லெண்ணத்தை எண்ணிப் பார்த்தான். தன் தவறை உணர்ந்து வருந்தினான். மனம் திருந்தினான். அவன் தந்தையை நாடிச் சென்று தன்னைமன்னித்து, வேலைக்காரனாக சேர்த்துக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ள முடிவு செய்து தந்தையை தேடிச் சென்றான்.

அவனைக் கண்ட தந்தை அவனை நோக்கி ஓடி வந்து அவனை ஆரத்தழுவிக் கொண்டார். அவனுக்கு சிறந்த உடைகள் கொடுத்தார். சிறந்த விருந்துகொடுத்தார். தன் பணியாட்களிடமும், நண்பர்களிடமும் இறந்து போன என் மகன் திரும்ப வந்து விட்டான். அவன் காணாமல் போயிருந்தான் மீண்டும்கிடைத்துவிட்டான். நாம் அனைவரும் இதைக் கொண்டாடுவோம் என்றார்

வயலில் வேலைக்குச் சென்றிருந்த பெரிய மகன் வந்து கொண்டாடங்களைக் கண்டான். தந்தை மேல் கோபம் கொண்டு, நான் நீங்கள் சொன்ன வாரத்தையைமீறியதில்லை. இத்தனை நாளும் உங்களோடு இருந்தேன். ஆனால் சொத்தை பிரித்து சென்று செலவழித்து வந்திருக்கும் இவனை வரவேற்று கொண்டாடுவதுஎந்த வகையில் நியாயம் என கேட்டான்.

அதற்கு தந்தை மகனே நீ என்னோடு இத்தனை நாட்களும் இருந்தாய்.என் அனைத்து சொத்தும் உனக்குத்தான். ஆனால் உன் தம்பி மீதும் கருணைகொள்ள வேண்டும். ஏனென்றால் அவன் மனம் திருந்தி வந்திருக்கிறான். அவன் இறந்து போனவன் மீண்டும் உயிருடன் வந்திருக்கிறான். காணாமல்போனவன் மீண்டும் கிடைத்திருக்கிறான். அவனை நாம் வரவேற்பதுதான் நியாயம் என்றார்.

இதன் மூலம் பாவம் செய்தவன் அதை உணர்ந்து திருந்தினால் அவன் மன்னிக்கப்படுவான் என்றார் இயேசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+