பிறந்தது ஆடி மாதம்
ஆண்டவனுக்கு தினந்தோறும் மலர் மாலை கட்டிக் கொடுத்து வந்தாள் ஆண்டாள். அவள்தான் கட்டிய மாலையை தான் முதலில் அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பாள்.தனக்கு திருப்தியாக இருந்தால்தான் அந்த மாலையை ஆண்டவனுக்கு அணிவிக்க தன்தந்தையிடம் கொடுப்பாள்.
ஒரு நாள் இது போல் ஆண்டவனுக்கு தொடுத்த மாலையை ஆண்டாள் சூடிக் கொண்டதைபார்த்த பெரியாழ்வார் பதறிப் போனார். ஆகா! இது என்ன பாவம்! ஆண்டவனுக்குஅணிவிக்கும் மாலையை நீ அணியலாமா? என்று கேட்ட அவர் வேறு மாலை தொடுத்துஆண்டவனுக்கு அணிவித்தார்.
ஆனால் அந்த மாலையை ஆண்டவன் ஏற்கவில்லை. பதறினார் பெரியாழ்வார்.மகாவிஷ்ணுவோ, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எனக்கு வேண்டும் எனக் கூறிஅந்த மாலையையே சூடிக் கொண்டார்.
இதுதான் ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர் கொடியான கதை.
சில நாட்கள் சென்றது. காலம் கனிந்தது. பெருமாள் தான் கூறிய படி ஆண்டாளை மணக்கஎண்ணினார்.
பெரியாழ்வார் கனவில் தோன்றி, ஆண்டாள் பூமகள். அவளை நீ நாளை என் சன்னிதிக்குஅழைத்து வா. அவளை நான் மணந்து கொள்கிறேன் என்றார். தூக்கம் கலைந்து துள்ளிஎழுந்தார் பெரியாழ்வார். கனவு நிஜமா? பிரமையா என சந்தேகப்பட்டார்.
ஆனால் அடுத்த நாள் காலை ஆண்டவன் கூறியபடி ஆண்டாளை அலங்கரித்து பெருமாள்சன்னிதிக்கு அழைத்துச் சென்றார்.
சட்டென்று ஓர் ஒளி ஆண்டாள் மீது வீசியது. சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் சிறுபொறி ஆனாள். அந்த பொறி நட்சத்திரமாய் மாறி கோவிலில் அருள் புரிந்து கொண்டிருந்தஇறைவனை நோக்கி நகர்ந்து இறைவனில் ஐக்கியமானது.
சிலிர்த்துப் போனார் பெரியாழ்வார். என்னே என் பாக்கியம். பூமாதேவியை அல்லவாநான் வளர்த்திருக்கிறேன். இறைவன் என் மேல் கொண்ட கருணையை என்ன சொல்வதுஎன கூறி எண்சாண்கிடையாக விழுந்து இறைவனை நமஸ்கரித்தார்.
இந்த சம்பவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும்ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கு என்று தனி கோவிலும் உள்ளது.
இந்த ஆடிப்பூர திருநாளில் ஆண்டாளை பூஜிப்பதால் பெருமாளின் அருள் பரிபூரணமாககிடைக்கும். ஆண்டாளை பூஜிப்பதால் பெண்கள் மனம்போல் மாங்கல்யமும் பெறலாம்.தாங்கள் விரும்பியபடி கணவனை அடையலாம்.
இந்த ஆடிப் பூர தினத்தில் ஆண்டாளை வணங்குங்கள், இறைவனின் அருள் பெறுங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications