காவிரியில் புனித நீராடும் பக்தர்கள்
சிவபெருமானுக்கு திருமணம் நடந்த நாள்
டெல்லி:
சிவராத்திரியை முன்னிட்டு இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் பக்தர்கள் கூட்டம் சிவன்கோவிலில் அலை மோதியது.
சிவராத்திரி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்கள்கணவரின் நலனுக்காகவும் குழந்தைகள் நலனுக்காவும் இந்த தினத்தில் பிரார்த்தனைகள்செய்வர்.
திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு சிவபெருமான் போல் நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என பிரார்த்தனை செய்வர்.
பெண்கள் நாள் முழுதும் விரதமிருந்து இரவில் கண் விழித்து பஜனைகளில் ஈடுபடுவார்கள்.
வயது வித்தியாசமில்லாமல், ஜாதி வித்தியாசம் இல்லாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில்நின்று சிவபெருமானை தரிசித்து வருகிறார்கள். சிவராத்திரியையொட்டி கோவில்கள்வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
டெல்லியின் எல்லா சிவன் கோவில்களிலும் மக்கள் வில்வ இலையுடனும், பூக்களுடனும்சிவபெருமானை தரிசிக்க பெரும் திரளான மக்கள் கோவில் நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.
சிவராத்திரி தினத்தன்றுதான் சிவபெருமான் பார்வதி தேவியை மணந்ததாக கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
