நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்
சென்னை:
இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகத்துடன்கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்துக்களில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வட இந்தியாவிலும் விநாயகர் சதுர்த்தி மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
10 நாட்களுக்கு முன்னதாகவே விநாயகர் சிலை விற்பனை துவங்கி விட்டது. முன்னர்களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவதுவழக்கம். ஆனால் தற்போது அவை மாறி பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் அதிகமானவிநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு பல வண்ணங்களிலும்,பலஸ்டைல்களிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
விநாயகர் சிலை விற்பனை செவ்வாய்க்கிழமை மாலையே சூடு பிடித்து விட்டதுஆனாலும் புதன்கிழமை அதிகாலையில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக விநாயகர்சிலை, விநாயகருக்கு பேப்பரில் செய்யப்பட்ட குடை, எருக்கம்பூ மாலை என்றுவாங்கி சென்றனர்.
வீடுகளில் எல்லாம் மாக்கோலம் போடப்பட்டு, மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டுவிழாக் கோலம் பூண்டிருந்தன.
திருச்சி:
திருச்சி என்றால் நினைவுக்கு வருவது காவிரி ஆறும், மலைக் கோட்டை விநாயகர்கோவிலும், பள்ளி கொண்ட பெருமாள் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கமும்தான்.
மலைக் கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் எப்போதும் விநாயகர் சதுர்த்தி விழாகோலகலமாக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் வழக்கம் போல் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாககொண்டாடப்பட்டது.
மலைக்கோட்டைக்கு கீழே உள்ள மாணிக்கவிநாயகருக்கு அதிகாலையில் சிறப்புஅபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசமும் சார்த்தப்பட்டது.
அதே போல மலை மேல் அமர்ந்து, காவிரிக் காற்று இனிதே, குளுமையாக தாலாட்டஅருள் பாலித்துவரும் உச்சி பிள்ளையாருக்கும் அதிகாலையில் சிறப்பு பூஜைகள்நடைபெற்றது.
காலை முதலே கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றுமாணிக்க விநாயகரையும், 426 படி ஏறி உச்சி பிள்ளையாரையும் தரிசித்தனர்.
பிள்ளையார்பட்டி:
தமிழகத்தில் மிக பிரசித்து பெற்ற பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா மிககோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிள்ளையார்பட்டி பிள்ளையார் சுயம்பு விநாயகர் என்று கூறப்படுகிறது. இங்குஅதிகாலை முதலே பக்தர் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் மக்கள் நின்றுதங்க கவசம் அணிந்து அருளே வடிவாக பக்தர்களுக்கு அருள் புரிந்த காட்சி காணக்கண் கொள்ளா காட்சி.
இது தவிர எல்லா விநாயகர் கோவிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாககொண்டாடப்பட்டது.
காவல்துறையினர் எல்லா இடத்திலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications