வாழ்க தீபாவளி, பொங்கலும் வாழ்க!
க.தனுஷ்கோடி
தமிழகத்தைப் பொறுத்தவரை தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இடையே 'அன் அபீசியல்' சண்டையே நடந்து வருகிறது.
தீபாவளி நகர்ப் பகுதிகளின் பண்டிகையாகிவிட்டது. தமிழர் பண்டிகையான பொங்கல் வெறும் கிராமப் பண்டிகையாக சுருங்கிவிட்டது.
இதற்குக் காரணம் போனஸ். நகர்ப் புற அலுவலகங்ளில் தீபாவளிக்குத் தான் போனஸ். ஆனால், பொங்கலின்போது தான் விவசாயிகளுக்கு இயற்கை போனஸ்தருகிறது.
நகர்ப் புறங்களில் தீபாவளிக்குத் தான் புது டிரஸ். பொங்கலுக்கு ஒரு 3 நாள் லீவு கிடைக்கும். குக்கரில் பொங்கல் சமைத்து சாப்பிட்டுவிட்டு டிவி முன்உட்கார்ந்துவிடுகிறார்கள். பேஸ்ட் துணையுடன் வாழும் நமது பற்கள் கரும்பு கடிக்க எல்லாம் நம்மை அனுமதிப்பதில்லை.
ஆக, கிராமங்களில் தான் பொங்கல் 'வாழ்ந்து' கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் என பொங்கலுக்கே உரிய சிறப்பு பந்தயங்களுடன் கிராங்களில்மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. நகர்ப்புறவாசிகள் இவற்றை எல்லாம் ராமராஜன் படத்தில் பார்த்ததோடு சரி.
பொங்கலுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு என்று ஒரு தொகை கொடுக்கிறது. இருந்தாலும் அந்தத்தொகை கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்அளவுக்கு பெரிய தொகையாக இருப்பதில்லை.
ஆனால், கிராமங்களில் நிலைமை வேறு. தீபாவளி நேரத்தில் அறுவடை நடைபெற்றிருக்காது. இதனால் உழவர்களின் கையில் காசு இருக்காது.காலமெல்லாம் கழனியில் உழன்ற உழவர்கள் பொங்கல் நேரத்தில்தான் அறுவடை முடித்து காசையே பார்ப்பார்கள். எனவே தீபாவளிக்கெல்லாம்அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.
நகரமோ, கிராமமோ நிதி நிலைமை தான் பண்டிகைகளை முடிவு செய்கின்றன.
கொண்டாட்டங்கள் மனிதன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தான். எனவே அது தீபாவளியாக இருந்தாலும், பொங்கலாக இருந்தாலும், மனிதனின்மனம் குளிர்ந்தால் சரி.
வாழ்க தீபாவளி. பொங்கலும் வாழ்க!.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications