விநாயகர் சதுர்தி - பூஜை முறைகள்
பாலும் தெளிதேனும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீயெனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா
பூஜை முறைகள்:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்த ஆண்டு (விஷு ஆண்டு) ஆவணி மாதம் 6ம் தேதி(22.08.2001) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் பொம்மைகள்கடைவீதிகளில் விற்கப்படும். சிறியதும், பெரியதுமான விநாயகர் பொம்மைகள்விற்கப்படும். அவற்றை வாங்கி வந்து வீட்டில் பூஜைய அறையில் வைக்கப்பட்டுஅவை பூஜிக்கப்படும்.
விநாயகருக்கு முக்கியமான நிவேதனம். கொழுக்கட்டை என்று அழைக்கப்படும்மோதகம். இது அரிசி மாவில் கூடு செய்யப்பட்டி அதனுள் வெல்லம் போட்ட இனிப்புபூரணமும், உளுத்தம் பருப்பு போட்ட பூரணமும் போடப்பட்டு இனிப்புகொழுக்கட்டையும், உளுந்து கொழுக்கட்டையும் வேக வைத்து நிவேதனம்செய்யப்படும்.
இது தவிர பழங்களும் நிவேதனம் செய்யப்படும். விநாயகருக்கு எருக்கம் பூ மாலைமிகவும் உகந்தது.
பூஜையில் எல்லா விதமான பூக்களையும் பயன்படுத்தலாம். விநாயகரை சதுர்த்திதினத்தன்று மட்டும் விநாயகர் பூஜையில் துளசி சேர்த்துக் கொள்ளப்படும்.
ஏன் விநாயகர் சதுர்தி தினத்தன்று மட்டும் துளசி பூஜையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது? இதற்கான புராண கதை.
துளசி தேவி விநாயகரை மணக்க வேண்டும் என்று கடுந்தவம் புரிந்தாள். நீவிஷ்ணுவுக்குத்தான் மனைவியாக வேண்டும் என்று விநாயகர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் துளசி தேவி கேட்கவில்லை. விநாயகரை மணக்க வேண்டும் என்றுபிடிவாதமாக இருந்தாள்.
விநாயகருக்கு கடும் கோபம் வந்தது. நீ செடியாக மாறுவாயாக! என் நித்தியபூஜைகளுக்கு சேரும் தகுதியையும் நீ இழக்கிறாய்! என்று சாபமிட்டார்.
பின்னர் துளசியின் மேல் இரக்கம் கொண்டு நீ செடியாக பூமியில் இருக்கும் காலத்தில்விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மட்டும் மற்ற மலர்களைப் போல் துளசியும் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அருளினார்.
இதனால் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மட்டும் துளசி பூஜைக்கு தேர்த்துக்கொள்ளப்படும். மற்ற படி தினசரி பூஜைகளில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.
விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு,மாக்கோலங்கள் போடப்பட்டு விநாயகருக்கு பூஜை செய்யப்படும். நிவேதனத்தில்கொழுக்கட்டை, பழங்கள் தவிர பச்சரிசி மாவினால் செய்யப்பட்ட இட்லியும்முக்கியமானதாகும்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்புஅபிஷேக ஆராதனைகள் நடைபெறும்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications