இன்று கார்த்திகை திருநாள்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா 09.12.200, சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை திருநாள் தமிழகத்தில் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வரும் திருநாளாகும்.

அகல் விளக்கேற்றி:

கார்த்திகை திருநாளன்று வீடுகள் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல்பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.

திருவண்ணாமலையில் கார்த்திகை:

கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில்நெருப்புகுறிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை.

கார்த்திகை தினத்தன்று தமிழகத்தின் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்ட்டிருக்கும். எங்கெங்கு காணினும்விளக்கு, விளக்கு, விளக்குதான்.

விளக்கின் ஒளி புற இருளை போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும்.

கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி,பஞ்சாலோ, திரியாலோ செய்யப்பட்ட திரியை போட்டு பூஜை செய்யப்பட்டு விளக்கு ஏற்றபட்டு வீட்டின்அறைகளிலும், ஜன்னல் கம்பிகளிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும்.

அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இரவை பகலாக்கும் இந்ததீபத் திருநாள் 3 நாள் கொண்டாடுப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+