ஜோதித்தலத்தில் தீபத்திருவிழா
ஜோதித்தலத்தில் கார்த்திகைத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டடாப்படுகிறது ஏன்?
திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. தில்லை சிதம்பர ஈசனை தரிசித்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.
ஜோதித்தலம்:
திருவண்ணாமலைக்கு ஜோதித்தலம் என்ற பெயருண்டு. எவ்ளாறு அது ஜோதித்தலமாயிற்று? அதற்கான புராண கதையை அறிந்து கொள்வோம்.
ஒரு நாள் படைக்கும் கடவுள் பிரம்மனுக்கும், காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கும் பெரும் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது. அவர்களில் யார் பெரியவர்என்பது குறித்து தான் வாக்குவாதம்.
நான் படைக்கும் கடவுள். அனைத்தையும் படைப்பவன் நான். நான் தான் உயர்ந்தவன் என்றார் பிரம்மன்.
நீங்கள் படைத்தாலும் அதைக் காப்பவன் நான். எனவே, நான் தான் பெரியவன் என்றார் பரந்தாமன்.
வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே போயிற்று. இறுதியில் இருவரும் சிவபெருமானை அணுகி இதற்கு தீர்ப்பு வழங்குங்கள் என கேட்டனர்.
சிவ பெருமான் உங்கள் இருவரில் யார் என் காலையோ அல்லது என் தலையையோ பார்க்கிறார்களோ அவரே உங்கள் இருவரில் பெரியவர் என கூறிஅதியோடு அந்தமாக ஜோதி வடிவமாக விஸ்வரூபம் எடுத்தார்.
பரந்தாமன் பன்றி (வராஹ) உருவெடுத்து ஈசனின் திருவடி காண பூமியை தோண்டிக் கொண்டு சென்றார். ஏழெழு பாதாள லோகங்களையும் பிளந்து கொண்டுசென்றார். சென்று கொண்டே இருந்தார். அவரால் சிவனின் திருவடியைக் காண முடியவில்லை. தோல்வியுடன் மேலே வந்தார்.
பிரம்மா அன்னப்பறவை உருவெடுத்து மேலே பறந்து சென்றார். பறந்தார், பறந்தார் உயர உயர பறந்தார். அவரால் சிவனின் திருமுடியைக் காணமுடியவில்லை.
தாழம்பூ:
அப்போது விண்ணிலிருந்து தாழம்பூ கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அதை தாவிப் பிடித்தார் பிரம்மன். எங்கிருந்து வருகிறாய் என கேட்டார்.
நான் சிவபெருமானின் திருமுடியிலிருந்து வருகிறேன். நான் கீழே வர ஆரம்பித்து பல யுகங்களாகி விட்டது. இன்னும் பூமியை அடையவில்லை என கூறியதும்அதை தனக்கு பொய் சாட்சி கூற அழைத்துக் கொண்டு ஈசனிடம் சென்று நான் உங்கள் திருமுடியை தரிசித்து விட்டேன். அதற்கு தாழம்பூதான் சாட்சி. எனவேநான்தான் பெரியவன் என கூற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சினம் கொண்டார் சிவன். பிரம்மன் சொன்னதும் பொய். தாழம்பூ சொன்னதும் பொய். பிரம்மனுக்கு எங்குமே கோயில் இல்லாது போகட்டும் எனசபித்தார். தாழம்பூ இனி சிவ பூஜைக்கு பயன் படுத்தப்படக்கூடாது எனவும் சபித்தார்.
இன்றும் எங்கும் பிரம்மனுக்கென்று தனி கோயில் கிடையாது. சிவ பூஜையில் தாழம்பூவும் பயன் படுத்தப்படுவதில்லை.
தன் தவறை உணர்ந்தார் பிரம்மன் மனம் திருந்தினார்.
மனம் திருந்திய பிரம்மனுக்கும், உண்மைடை ஒப்புக் கொண்ட விஷ்ணுவுக்கும் தன் பெருஞ் ஜோதி உருவத்தை சிறியதாக்கி ஜோதி மலையாக காட்சி தந்தார்.அந்த மலையிலிருந்து சிவ திருவுருவும் வெளிப்பட்டது.
அந்த மலைதான் திரு அண்ணாமலை. இப்போது மருவி திருவண்ணாமலையானது. சிவ திருவுருதான் அருணாசலேஸ்வரர்.
நெய் தீபம்:
இறைவன் ஜோதிவடிவாக காட்சி தந்த அருணாலேஸ்வர் கோவிலுக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் கார்திகை தினத்தன்று பெரிய கொப்பரையில் பலமீட்டர் துணியில் பெருமளவில் நெய் ஊற்றி கற்பூரத்தில் அதில் போட்டு தீப மேற்றுவார்கள்.
அது ஜகஜ்ஜோதியாக எரியும் அதே நேரத்தில் அருணசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாரதனையும் நடைபெறும்.
நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. ஜோதி வடிவான அண்ணாமலையானை தரிசித்து அளவில்லா இன்பம் அடைவோம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications