ஜொலித்தது திருவண்ணாமலை
தமிழகத்தில் விமரிசையாக நடைபெறும் கார்த்திகை திருவிழா சனிக்கிழமைவழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.
கார்த்திகை திருவிழா திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடந்தது. பலலட்சக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை தீபத்தை கண்டு களித்தனர்.லட்சக்கணக்கானமக்கள் மலையைச்சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவு கிரி வலமும் சென்றனர்.
சிவன் மலையில் குடி கொண்டுள்ள இடங்களிலும், முருகன் குடி கொண்டுள்ளஇடங்களிலும் கார்த்திகை திருநாள் விமரிசையாக சனிக்கிழமை நடந்தது.
திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா மிகவும் விசேஷமானது.திருவண்ணாமலையில் கார்த்திகை நடைபெறும் நாளன்று மற்ற மலை கோவில்களும்கார்த்திகை திருநாள் கொண்டாடப்படும்.
இதன் படி திருச்சி மலைக் கோட்டை, முருகன் கோவில் கொண்டுள்ளதிருப்பரங்குன்மற்றும் குமரன் குடிகொண்டுள்ள பல கோவில்களிலும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது.
மற்ற சிவஸ்தலங்களில் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை திருவிழா நடைபெறுகிறது.
வைஷ்ணவ திருத்தலங்களில் கார்த்திகை தீபத் திருவிழா திங்கள் கிழமைகொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications