பூஜைகளும் கொண்டாட்டங்களும்...
காளிங்க நர்த்தனம்:
ஒரு முறை கிருஷ்ணர் தன் நண்பர்களுடன் காளிங்க மடுவுக்கு (குளம்) அருகில் பந்துவிளையாடிக் கொண்டிருந்தார்.
காளிங்க மடு ஆழமான குளம். அது குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவந்த குளம்.
இந்த குளத்தில் காளிங்கன் என்ற அசுரன் பாம்பு வடிவில் வந்து குளத்திற்கு அடியில்வந்து தங்கிவிட்டான். அங்கு குளிக்க வருபவர்களையும், நீர் எடுக்க வருபவர்களையும்பிடித்து விழுங்கி வந்தான்.
காளிங்கன் வந்து தங்கி இருந்ததால் அந்த மடுவுக்கு காளிங்க மடு என்ற பெயர்வந்துவிட்டது.
அந்த மடுவை உபயோகிப்பதையே மக்கள் நிறுத்திவிட்டனர்.
அந்த மடுவிற்கு அருகில்தான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கிருஷ்ணர்.
திடீரென பந்து பறந்து சென்று காளிங்க மடுவிற்குள் விழுந்து விட்டது. உடனே பந்தைஎடுக்க காளிங்க மடுவிற்குள் இறங்கினார் கிருஷ்ணர். பதறிப் போனார்கள் நண்பர்கள்.
உள்ளே அசுரன் இருக்கிறான் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதற ஆரம்பித்தனர்.அவர்கள் குரல் கேட்டு ஆயர்பாடி முழுவதும் காளிங்க மடுவின் அருகே கூடிவிட்டது.
சற்று நேரம் கழித்து ரத்தம் மேலே வந்து மடுவின் மேற்புறம் நீர் முழுவதும் சிகப்பாகமாறத் தொடங்கியது. எல்லோரும் பயந்து போனார்கள். கிருஷ்ணரைத்தான் காளிங்கன்கொன்றுவிட்டான் என்று வருந்தி அழத் தொடங்கினார்கள்.
ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே காளிங்க பாம்பின் வாலை தன் ஒரு கையில்பிடித்தபடி அதன் தலை மேல் நர்த்தனமாடியபடியே மடுவிற்கு மேல் வந்தார்கிருஷ்ணர். பாம்பு வடிவில் இருந்த அசுரனும் கொல்லப்பட்டான்.
காளிங்கனை கொன்று அதன் மேலே நர்த்தனமாடி வந்ததால் அதற்கு காளிங்கநர்த்தனம் என்று பெயர்.
காலம் கடந்தது. தன் கடமையை உணர்ந்தார் கிருஷ்ணர். கம்சனை கொல்ல வேண்டியகாலம் வந்தது. மதுரா சென்றார் கிருஷ்ணர். அங்கு கம்சனுடன் நேருக்கு நேர்போரிட்டு அவனை அழித்து தன் தாய் தந்தையை விடுவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications