அரங்கநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
திருச்சியில் காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமைந்திருப்பது திருவரங்கம் அருள் மிகு அரங்கநாதர் திருக்கோயில். இங்கு அமைந்திருக்கும்ராஜகோபுரம் ஆசியாவிலேயே மிக உயர்ந்த ராஜகோபுரமாகும். இந்த புண்ணியத்தலத்திற்கு பூலோக வைகுண்டம் என பெயரும் உள்ளது.
திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (15.-3.2001) காலை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக வைபவத்திற்கு முன் நடைபெறும் யாகசாலை பூஜைகள் 11.03.2001 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
திருவரங்கத்தில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்திற்காக ரூ 4 கோடி மதிப்பீட்டில் ரங்கநாத சன்னிதியின் தங்க விமானம், ராஜகோபுரம், கோயிலைச்சுற்றி இருக்கும் கோபுரங்கள், தாயார் ரெங்கநாச்சியார் விமானம், ராமானுஜர் விமானம், சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளிட்ட பல கோபுரங்கள்மற்றும் சன்னிதிகளில் திருப்பணிகள் சிறப்புற நடை பெற்றுள்ளது. திருவரங்கத்தில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் விமானங்களின் பெயர்கள் வருமாறு:
தெற்கு கட்டை கோபுரம் நம்பர் -1
நான்முகன் கோபுரம்
ஆர்யபட்டாள் கோபுரம்
பரமபதவாசல் கோபுரம்
தாயார் சன்னிதி நுழைவு கோபுரம்
வடக்கு கட்டை கோபுரம் நம்பர் -2
தாமோதர கிருஷ்ணனம் கோபுரம்
வெள்ளை கோபுரம்
மேற்கு கட்டை கோபுரம் நம்பர் -2
திருவெண்ணாழி துர்க்கை
கிருஷ்ணன் சன்னிதி மற்றும் விமானம்
லட்சுமி சரஸ்வதி சன்னிதி மற்றும் விமானம்
பெரியகருடன் சன்னிதி மற்றும் விமானம்
உள் ஆண்டாள் சன்னிதி மற்றும் விமானம்
தேசிகர் சன்னிதி மற்றும் விமானம்
தொண்டரடி பொடியாழ்வார் விமானம்
முதலாழ்வார் விமானம்
பெரியவாச்சான் பிள்ளை விமானம்
திருக்கச்சி நம்பிகள் விமானம்
தெற்கு கட்டை கோபுரம் நம்பர் -2
கார்த்திகை கோபுரம்
நாழிகேட்டான் கோபுரம்
ஐந்துகுழி மூன்று வாசல் கோபுரம்
வடக்குகட்டை கோபுரம் நம்பர் -3
தாயார் ஆர்யபட்டாள் கோபுரம்
கிழக்கு கட்டை கோபுரம்
மேற்கு கட்டை கோபுரம் நம்பர் -1
திருவெண்ணாழி கணநாதர் சன்னிதி
திருவெண்ணாழி யோக நரசிம்மன் சன்னிதி
சேனை முதலியார் சன்னிதி விமானம்
ஹயக்ரீவர் சன்னிதி
தசமூர்த்தி சன்னிதி
நம்மாழ்வார் சன்னிதி விமானம்
மேட்டழகிய சிங்கர் சன்னிதி விமானம்
கூரத்தாழ்வார் விமானம்
அமிர்தகலச கருடன்
தீர்த்தக்கரை வாசுதேவப்பெருமாள் விமானம்
கோதண்டராமர் விமானம்
பிள்ளை லோகாச்சாரியார் விமானம் உள்ளிட்ட அனைத்திற்கும் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள்நடைபெற உள்ளது.
மகா கும்பாபிஷேகத்தை தரிசித்து அனைவரும் அரங்கனின் அளவிலா அருள் பெறுவோம்.
ஸ்தல புராணம்:
வைணவக் கோவில்களில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோவில். அங்கு பெருமாள் அனந்தசயனத்தில்அருள்பாலிக்கிறார்.
திருவரங்கத்தில் எம்பெருமாள் நீண்ட நெடும் திருமேனியாக 21 அடி அளவில் அனந்த சயனத்தில் சயனித்திருக்கிறார். ஒரு திருக்கை தலையை தாங்கியிருக்க மற்றொரு கையை கால் மேல் வைத்து அருகில் திருமகளுடனும்,நாபிக்கமலத்தில் பிரம்மாவும் இருக்க அருள் பாலித்து வருகிறார் பெருமாள்.
இங்கு பரந்தாமன். எம்பெருமான். அரங்கநாதர் வந்ததற்கான கதை சுவையானது. அது குறித்து இப்போது அறிவோம்.
சோழ நாட்டை ஆண்டு வந்தவன் சோழ மன்னன் கிள்ளிவளவன். அவன் தன் நாட்டில் பிரச்னை தோன்றினாலோ அல்லது மனக்கவலை தோன்றினாலோஅவன் வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
அதே போல் ஒரு நாள் எந்த பிரச்னையும் இல்லாத போதே அவன் மனம் வேட்டைக்குச் செல்ல துடித்தது. அவன் மனமும் இனம் புரியாத சந்தோஷத்தில்இருந்தது.
வேட்டைக்கு தன் குதிரை மேல் கிளம்பினான் அரசன். காட்டுக்குள் நுழைந்தான். எதிரே வந்த சிறுத்தையை கொல்ல அம்பை எடுக்க பார்த்தான்.அம்பும் இல்லை. வில்லும் இல்லை: வாளும் இல்லை: எல்லாத்தையும் மறந்து விட்டு வந்து விட்டான் கிள்ளி வளவன்.
ஆனால் அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. சிறுத்தை மண்டியிட்டு மன்னனுக்கு வழிவிட்டு சென்று விட்டது.
வனப்பகுதி முழுவதும் சுற்றிவிட்டு இளைப்பாற மர நிழலில் ஒதுங்கினான். மரத்தின் மீது கிளி ஒன்று கண்களை முடிய நிலையில் ஸ்லோகம் சொல்லிக் கொண்டேஇருந்தது. மன்னனுக்கு அதன் பொருள் புரியவில்லை.
மன்னன் கண்ணயர்ந்தான். அவன் கனவில் பெருமாள் தோன்றினார். யாம் இங்கே இந்த பூமயில் விமானத்துடன் எழுந்தருளி இருக்கிறோம். இந்தமரத்திற்கு அடியில் தான் இருக்கிறோம். உன் முன்னோரான தர்மவர்மா என்ற மன்னனுக்காக காவேரி தடத்துக்கு வந்தோம் என கூறிமறைந்தார்.
விரைந்து நாடு சென்று ஆட்களை அழைத்து வந்து அந்த இடத்தை தோண்டினான். பூமிக்கு அடியில் ஸ்ரீரங்க விமானம் பளபளப்புடன் ஜொலித்தது.
ஸ்ரீரங்கர் இருந்த விமானம் உட்பட திருவீதி முதல் பிரகாரம் என எல்லாம் காட்சியளித்தன. மன்னன் அனைத்தையும் சீரமைத்தான். தென்னாறு,வடவாறு என காவேரியை வெட்டச் செய்தான்.
கிளிமூலம் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததால் கிள்ளிவளவன் என்ற மன்னன் பெயர் கிளிச்சோழன் என மாறியது.
இன்றும் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் கிளியின் நினைவாக கிளி மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் கூண்டில் ஒரு கிளி இருப்பதையும் காணலாம்,
ஸ்ரீரங்கநாதர் இங்கு எப்படி வந்தார்.அதற்கான காரணத்தை இப்போது தெரிந்து கொள்வோம். கங்கா. .யமுனா, காவேரி ஆகிய மூன்று நதிப் பெண்களும்சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த பக்கமாக வந்த கந்தவர்வன் அவர்களை பார்த்தான். அவர்கள் அழகில் சொக்கிப்போய் அவர்களை பார்த்து கும்பிட்டவிட்டுப் போனான்.
ஆரம்பித்தது பெண்களுக்கே உரித்தான பெருமைப் போட்டி.
கங்கை கூறினாள்: அந்த கந்தர்வன் என்னை வணங்கினான் என்று.
யமுனா மறுத்தாள் : அவன் நம் மூவரையும்தான் வணங்கினான் என்று.யமுனா சொல்வது சரி என காவேரி ஆமோதித்தாள்.
கங்கைக்கு கோபம் பொங்கியது, நீங்கள் இருவரும் இணைந்தால் நான் கூறிய உண்மை பொய்யாகிவிடாது. வாருங்கள் நாராயணனிடம் போய் நியாயம்கேட்போம் என கூறியதும் மூவரும் பரந்தாமனை சந்திக்கச் சென்றனர். மூவரும் வாதம் செய்து நியாயம் கேட்டனர்.
கங்கை கேட்டாள் ஸ்வாமி உங்கள் பாதத்தில் பிறந்தவள் நான் இந்த ஒன்று போதாதா நான்தான் சிறந்தவள் என கூற என்றாள். பரந்தாமனும்வேறு வழியின்றி கங்கைதான் சிறந்தவள் என தீர்ப்பளிக்கவும், யமுனா வருத்தமுடன் வெளியேற, காவேரி கங்கையின் பெருமையை முறிடிக்கிறேன் என்றமுடிவுடன் வெளியேறினாள்.
கானகம் சென்று தவமிருந்தாள் காவேரி. காவேரியின் தவத்தை மெச்சிய எம்பெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.
கங்கையைவிட புனிதமான தன்மை எனக்கு வேண்டும் என கேட்டாள். விரைவில் நீ இருக்கும் இடத்தில் நான் சயனம் செய்வேன். அப்போது நீகங்கையைவிட புனிதமாவாய் என வரம் தந்து மறைந்தார்.
திருவரங்கத்தில் வந்து எம்பெருமான் சயனித்தது இப்படித்தான்.
மேலும் ஒரு கதை எவ்வாறு ரங்கநாதன் காவேரிக்கரை வந்து சேர்ந்தார் என்பதை தெரிந்து கொள்ள. வாருங்கள் அதையும் தெரிந்து கொள்ள.
சூரியகுலத்தவர் ஸ்ரீரங்கநாதரை வணங்கி வந்தனர். அவர்கள் ஸ்ரீரங்கவிமானத்தை பரம்பரையாக வணங்கிவந்தனர். சூரியகுலத்தையே தழைக்க வைத்து வந்ததுஅந்த ஸ்ரீரங்க விமானம்.
சீதையை ராவணன் கடத்திச் சென்ற பின் சீதையை மீட்க ராமன் போரிட்ட போது வீபிஷணன் ராமரின் பக்கம் சேர்ந்தான். ராவணன் வதம் முடிந்தததும் தன்பரம்பரையே வணங்கி வந்த ஸ்ரீரங்க விமானத்தை வீபஷணனுக்கு பரிசாக வழங்கினார்.
ராமபிரானிடமிருந்து, ஸ்ரீரங்க விமானத்தை பெற்றுக் கொண்டு இலங்கை நோக்கி மகிழச்சி பொங்க சென்று கொண்டிருந்தான் புதிய இலங்கை வேந்தன்வீபஷணன்.
உச்ச காலம் வந்தது. ரங்கநாதனுக்கு பூஜை செய்ய விமானத்தை கீழே வைத்துவிட்டு காவேரியில் நீராடி விட்டு பூஜை செய்ய விமானத்தை எடுத்த போதுவிமானத்தை நகர்த்த முடியவில்லை.
விமானம் மேலும் மேலும் பெரிதாகிக் கொண்டே போனது. வீபிஷணன் தவித்தான். துடித்தான். பெருமாளே இது என்ன சோதனை என கதறினான்.பெருமாள் அவனை தேற்றினார். நான் காவேரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவே இங்கு தங்குகிறேன். நான் இங்கிருந்தாலும் என் பார்வை நீஇருக்கும் தென் திசை நோக்கியே இருக்கும் என திருவாய் மலர்ந்தருளினார்.
அப்போதைய சோழ மன்னன் தர்மவர்மன் அங்கு வந்து பெருமா பூஜித்து கோயில் எழுப்பி சிறப்பித்தான். அதன் பின் சில காலம் பூமா தேவியுடன் பூமிக்குஅடியில் இருந்விட்டு கிள்ளிவளவன் மூலமாக மீண்டும் வெளி வந்து இன்றும் நமக்கு அருள்பாலித்து வருகிறார் அரங்கமாநகருளான்.












Click it and Unblock the Notifications