பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள் வேண்டாமே!
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வைக்கப்படும் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டசிலைகளாகவே இருக்க வேண்டும் என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
வருகிற புதன்கிழமை இந்தியா முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலவிதமானவிநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முன்பெல்லாம் களிமண்ணால் ஆன சிலைகளே பெரும்பாலும் இருக்கும். ஆனால் காலம் மாற மாற விநாயகரும்மாறிவிட்டார். பிளாஸ்டர் ஆப் பாரிஸ், மெழுகு, பெயின்ட் பூச்சுக் கொண்ட விநாயகர் என விநாயகர் சிலைகள்பல பொருட்களிலும் பல வண்ணங்களிலும் தயார் செய்யப்படுகின்றன.
ஆனால், இது சுற்றுச்சூழலை கெடுக்கும் என்றும் களிமண்தான் சிறந்தது என்றம் தமிழக மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கூறியுள்ளது.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட பொருட்கள் நீரில் கரைத்தால் கரையாது. எனவே இவற்றால் செய்த விநாயகர்சிலைகள் தண்ணீரில் விடப்பட்டால் அது கரையாமல் அப்படியே இருக்கும். இது அந்தத் தண்ணீருக்குமட்டுமல்லாமல் சுற்றுப்புறத்துக்கே பெரும் கேடாகும்.
மேலும், சிலைகளில் பூசப்படும் பெயிண்ட்களில் உள்ள பொட்டாசியம் சயனைட் விஷத்தன்மை கொண்டது. கண்,தோல் நோய்களை பரப்பும் சக்தி கொண்டது. சுவாச பிரச்சினையும் இதனால் வரும்.
களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளையே அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதுதான் தண்ணீரில்எளிதில் கரையக் கூடியது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications