பூஜை முறை
சரஸ்வதி கல்விக்கு அதிபதி என்றாலும் சரஸ்வதிக்கென்று தனி கோவில் தமிழகத்தில் கிடையாது. காஞ்சிபுரத்திற்கு அருகில் ஒரு கோவில் உள்ளது.
சரஸ்வதிக்கென்று தனி கோவில் கிடையாது என்றாலும் பெரும்பாலான சிவஸ்தலத்திலும் சரஸ்வதிக்கென்று தனி சன்னிதி இருப்பதை காணலாம்.சரஸ்வதி பூஜையன்று கோவில்களில் உள்ள சரஸ்வதி விக்கிரகத்திற்கு வெண் நிற புடவை சாற்றப்பட்டு. தாமரை பூவால் அர்ச்சனை செய்யப்படும்.
சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
வீட்டில் நவராத்திரி நாட்களில் பூஜைகள் செய்ய இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை தினத்தன்று பூஜை செய்தாலே மற்ற நாட்களிலும் பூஜை செய்த பலன் கிடைக்கும்.சரஸ்வதி தினத்தன்று காலையில் வீட்டில் மாக் கோலம் போடப்ப்டடு, மாவிலை தோரணங்கள் கட்டப்படும்.
வீட்டில் படிப்பவர்கள் தங்கள் பாடப்ப்புத்தகங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து பூஜையில் வைப்பர். அன்றைய தினம் முழுவதும் எதையும் படிக்கமாட்டார்கள்.
அதே போல் தொழிற்சாலைகளிலும், இயந்திரங்கள் போன்றவற்றிற்கும் சிறப்பு பூஜை செய்யப்படும். இதற்கு ஆயுத பூஜை என்று பெயர்.
இதே போல் எல்லா வர்த்தக மையங்கள் கடைகள் போன்றவற்றிலும் தங்கள் வருமானத்திற்கு உதவும் பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள்.சரஸ்வதியின் அருள் இருந்தால்தானே புத்தி கூர்மை பெருகி எதிலும் சிறக்க முடியும்.
இந்த ஆண்டு (விஷு ஆண்டு) சரஸ்வதி பூஜையும்,. ஆயுத பூஜையும் ஐப்பசி மாதம் 8ம் தேதி (25.10.2001) வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி காயத்ரி:
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரச்சோதயாத்
இந்த ஸ்லோகத்தை சொன்னால் அன்னை சரஸ்வதியின் அருள் பூரணமாக கிடைக்கும்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications