ராஜாக்கள் பராக் .. பராக் ..
பொங்கல் திருநாளன்று திரைக்கு வரும் படங்களில் இம்முறை சில சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு.
இளைய ராஜாவின் குடும்பமே பொங்கல் படங்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு விட்டதாக கூறலாம். அப்பாவிஜய் படத்திற்கும், மூத்த மகன் கார்த்திக் ராஜா விஜயகாந்த் படத்திற்கும், இளைய மகன் யுவன் சங்கர் ராஜா அஜீத்படத்திற்கும் இசை அமைத்துள்ளனர்.
இதில் யுவன் சங்கர் ராஜாவின் இரண்டு படங்கள் திரைக்கு வருகின்றன. சரத் குமார் நடித்திருக்கும் ரிஷி படத்திற்கும்யுவன்தான் இசை. மகள் பவதாரிணியும் இவர்களின் படங்களில் ஒரிரு பாடல்களைப் பாடியுள்ளார்.
இளைய ராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியரான வாலி இம்முறை மகன் யுவனிடம் சென்றிருக்கிறார். மீண்டும் ஒருமுறை இளையவரின் ஆசியைப் பெற்றிருக்கிறார் பழனி பாரதி (பிரெண்ட்ஸ்).
ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்தப் பொங்கலுக்கு எதுவும் வரவில்லை. காரணம் தெரியவில்லை. ரஹ்மான்இல்லாததற்கும், ராஜாக்கள் படம் நிறைய வருவதற்கும் தொடர்பு இருப்பதாகவும் கூற முடியாது. ரஹ்மான் மீதுயுவன் சங்கர் ராஜா கண் வைக்கிறார் போலத் தெரிகிறது. காரணம், வார்த்தைகளுக்கு அவர் கொடுக்கும்முக்கியத்துவம். வைரமுத்துவுடன் இவர் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்து விட்டது.
இம்முறை வெளியாகும் படங்களில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. மலையாளத் திரையுலகின்பிரபலங்கள் சில, பாதிப் படங்களில் தலை காட்டியுள்ளனர்.
பிரெண்ட்ஸ் படத்தின் இயக்குநர் சித்திக், நாயகி விஜயலட்சுமி, தயாரிப்பாளர் அப்பச்சன், சரிதா, தீனா படத்தின்இரண்டாவது நாயகன் சுரேஷ் கோபி, வாஞ்சிநாதன் பட டைரக்டர் ஷாஜி கைலாஷ், அப்படத்தில் நடித்திருக்கும்கலாபவன் மணி ஆகிய அனைவரும் மலையாளத்தில் பிரபலமானவர்கள்.
இதில் சுரேஷ் கோபி நேரடியாக நடித்திருக்கும் முதல் தமிழ்ப் படம் தீனா என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாத வரம் வேண்டும் படம் வெளிவந்தால் அதுவும் இந்தப் பட்டியலில் சேரலாம். காரணம் அதன் டைரக்டர்கமலும் மலையாளத்துக்காரர்தான்.
இத்தனை சுவாரஸ்யங்களுடன் படங்கள் வந்தாலும், கிராபிக்ஸ் படமும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தாலி காத்தஅம்மன் என்ற படத்தில் கிராபிக்ஸ் அம்மன் மீண்டும் தலை காட்டுவார் போலத் தெரிகிறது. தாலி பறந்து, பறந்துவருமா என்பது படம் வந்தால்தான் தெரியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications