For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி: அர்த்தங்கள் பலவிதம்

By Staff
Google Oneindia Tamil News

பட்டாசுகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வெடிக்கலாம் என்று இப்போது உத்தரவிட்டிருக்கிறார்கள். இப்படிகுறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடிக்கலாம் என்று கூறுவதால் பட்டாசுகளால் கிளம்பும் புகை ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும்வியாபித்திருக்கும். அப்படி இல்லாமல் முன் போல இருந்தால் ஒவ்வொருவரும் ஒரு நேரத்தில் வெடிப்பார்கள். எனவே புகைமண்டலமாக இல்லாமல் இருக்கும்.

இந்துப் பாதிரியார்கள் ..

Ramagopalanஇந்து முன்னணியின் சார்பில் தர்ம வீரர் பயிற்சிக் கல்லூரி (இந்துப் பாதிரியார்கள்) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தமிழகத்தில், கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப 30 கல்லூரிகள் உள்ளன. ஒரு லட்சம் கிறிஸ்தவ போதகர்கள் உள்ளனர். இஸ்லாமைப்பரப்ப 10,000 மதரசா பள்ளிகள் உள்ளன. 30 அரபிக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் இந்து மதத்திற்கென இப்படி எதுவும் இல்லை.

கோவில் கட்டும் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ளகல்லூரி உள்ளது. விக்ரகங்களை வடிப்பதைக் கற்றுக் கொள்ள ஸ்தபதி கல்லூரிஉள்ளது. பூஜை முறைகளைப் புரிந்து கொள்ள வேதாகமப் பள்ளி உள்ளது. ஆனால் இந்துக்களின் மத பாரம்பரியம், சடங்குகள்ஆகியவற்றைக் கற்றுத் தரத்தான் கல்லூரியும் இல்லை, ஆட்களும் இல்லை.

இந்துக்கள் தங்களது மத பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை சரியாகப் புரிந்து கொள்ளாது இருந்து வருகிறார்கள்.குத்து விளக்கு ஏற்றுவது ஏன், எந்தக் கடவுளுக்கு எதைப் படைக்க வேண்டும், எந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடவேண்டும் என்பது உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களையும் புரிந்து கொள்ளாமல் அல்லது தவறுதலாகப் புரிந்து கொண்டுஇருக்கிறார்கள்.

அவர்களுக்கு அவர்களுடைய மத பாரம்பரியத்தை புரிய வைக்க வேண்டும் என்று யோசித்ததன் விளைவே தர்ம வீரர் பயிற்சிக்கல்லூரி திட்டம்.

மக்களுக்கு ஞானயோகம், பக்தி யோகம், கர்மயோகம் ஆகியவற்றைக் கற்றுத் தருவதே இந்தக் கல்லூரியின் நோக்கம்.அதேபோல, கிராம மக்களுக்கு மருத்துவ மற்றும் கல்வித் தொண்டு செய்யும் முக்கிய பணியையும் இந்தக் கல்லூரியில் படித்துவெளியேறுபவர்கள் செய்யவுள்ளனர்.

1000 ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற கல்லூரி இப்போதுதான் முதல் முறையாக துவக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே குழுமனிசாலையில், சீராத்தோப்பு என்ற கிராமத்தில் 60,000 சதுர அடிப் பரப்பளவில் இந்தக் கல்லூரி அமைந்துள்ளது. முழுமையான,விஸ்தாராமான கட்டடிம் தற்போது எழுந்து வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 10 பேர் பயின்று வருகிறார்கள். 30 பேர் படிப்புமுடிந்து களப்பணிக்குச் சென்றுள்ளார்கள்.

6 மாதம் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அது முடிந்த பின் 3 வருடங்களுக்கு அவர்கள் கிராமங்களில் மருத்துவமற்றும் கல்வித் தொண்டு புரிய வேண்டும். இந்த தர்ம வீரர், படிப்பு முடிந்த பின் களப்பணியில் இறங்குகிறார்.

அதேபோல, ஏழை கிராமத்து மாணவனுக்கு 1-வது முதல் 10-வது வகுப்பு வரை படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

தர்ம வீரர் பயிற்சிக் கல்லூரிக்கு முக்கியமான மூன்று குறிக்கோள்கள் உள்ளன. கோவில்களில் 6 கால பூஜை நடக்க வேண்டும்,நித்திய அன்னதானம், வயதான பசுக்களை கோவிலில் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அது.

கோவில்கள் வெறும் பக்திக்காக மட்டுமல்ல, அவை கலையின் பிறப்பிடம் கூட. அங்கு பூஜை நடைபெறாமல் இருந்தால் அதுநாட்டுக்கு நல்லதல்ல. கோவில்களில் தினசரி ஒரு கால பூஜையாவது குறைந்தபட்சம் நடக்க வேண்டும், அதேபோல ராமநாபஜெபமும் நடைபெற வேண்டும். கடவுள் அருள் கிடைத்தால் நாட்டிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்.

தமிழ்நாட்டில் 36,000 கோவில்கள் அரசு நிர்வாகத்தில் உள்ளன. இவற்றிற்கு 1 லட்சம் ஏக்கர் அளவுக்கு நிலங்கள் உள்ளன. ஆனால்20,000க்கும் மேற்பட்ட கோவில்களில் பூஜையே நடப்பதில்லை. ஜெயலலிதா முதல்வராக வந்த பின் கோவில்களில் ஒரு காலபூஜை, விளக்கு ஏற்றுவது ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தார்.

தமிழ்நாட்டில் கிராமக் கோவில்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் குறைந்தது 20-30கிராமத்துக்கோவில்கள் உள்ளன. இங்கு கிராம தேவதைகளான அய்யனார், கருப்பு சாமி, முனியாண்டி ஆகிய தெய்வங்களை மக்கள் வணங்கிவருகிறார்கள். அத்தோடு சில இடங்களில் நாகர் வழிபாடும் நடக்கிறது. இந்தக் கோவில்களில் பெரும்பாலானவற்றில்விளக்குகளே இல்லை.

அதேபோல, யாரும் பசித்திருக்க் கூடாது. அப்படி நடக்க வேண்டுமென்றால் கோவில்களில் நித்திய அன்னதானம் நடக்கவேண்டும். அப்படி இருந்தால் பசித்தவன் ஏதாவது கோவிலுக்குப் போய் தனது வயிறை ஆற்றிக் கொள்வான். பசிப் பிரச்சினையேஇருக்காது.

வயதான பசுக்களைக் கண்டிப்பாக நாம் காப்பாற்ற வேண்டும். பசுக்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள் என்பதுஐதீகம். எனவே வயதான பசுக்களை கோவில்களில் வைத்து காக்க வேண்டும். கோவிலுக்கு வருபவர்கள் தரும் உணவுப்பொருட்களை வைத்து அந்தப் பசுக்கள் உயிர் வாழும். அவை இயற்கையாக உயிர் நீக்க வேண்டும்.

மொத்தத்தில் அரசு நிர்வாகத்தில் கோவில்கள் இருப்பது சரியல்ல. அவற்றை அந்தந்த ஊரிலுள்ள ஆன்மீக, சமுதாயஆன்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் கோவில்கள் முறையாகவும், சரியாகவும் நடக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X