For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரகாசுரனுக்கு அஞ்சலியா செலுத்த முடியும்?

By Staff
Google Oneindia Tamil News

ராமர் கோவில் பிரச்சனையில் என்ன செய்யப் போகிறீர்கள்?

Ramagopalanஅயோத்தியில் கண்டிப்பாக ராமர் கோவில் கட்டியே தீருவோம். அங்கு பிரச்சினை தீர ஒரே வழி, இஸ்லாமிய மதப் பெரியவர்கள்ஒன்று சேர்ந்து அயோத்தியில் உள்ள இடம் இந்துக்களுக்குச் சொந்தமானதுதான், அங்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்என்று பெருந்தன்மையாக கூறிவிட வேண்டும். இது நடக்காவிட்டால் சட்டதியாக பிரச்சினைக்கு முடிவு கட்டுவோம். அதுவும்முடியாவிட்டால் மக்கள் சக்தியைத் திரட்டி கோவில் கட்டுவோம்.

மசூதியும் வேண்டாம், கோவிலும் வேண்டாம், அதை பொது இடமாக்கி விடுவோம் என்று சிலர் கூறுவது அயோக்கியத்தனம்.தாஜ்மஹாலுக்கு பலவித சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பார்க்க வருகிறார்கள். ஆனால் அதற்காக அந்த இடத்தை இடித்து விட்டுஇலவச மருத்துவமனை கட்டலாம் என்றால் இஸ்லாமியர்கள் அனுமதிப்பார்களா?

ராமர் கோவில் இடத்திற்காக இதுவரை 77 முறை யுத்தங்கள் நடந்துள்ளன. 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுஇந்துக்களின் தன்மான சின்னம். இதை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

பாகிஸ்தானின் கராச்சியில் விமான நிலையம் கட்டுவதற்காக 500 சிறு மசூதிகள் இடிக்கப்பட்டன. ஆனால் அப்போது யாரும் அதைஎதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

ஒரு சமுதாயம் (இந்துக்கள்) எப்படி அவமானப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு காசி, மதுரா ஆகிய கோவில்களே வாழும்சாட்சியங்கள். அந்தக் கோவில்களையும் நாங்கள் நிச்சயம் மீட்போம்.

தீபாவளிச் செய்தி...?

தர்மமே வெல்லும். அதர்மம் அழியும். அதர்மம் எந்த வழியில், எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒழித்துக் கட்ட வேண்டும். தர்மம்தானாக ஜெயிக்காது, அதை ஜெயிக்க வைக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். படிக்கும் காலத்தில் பிரமச்சரியத்தையும்,திருமணத்திற்குப் பின் இல்லற தர்மத்தையும் சரி வர கடைப்பிடிக்க வேண்டும்.

வீரர்களைப் பெறாதவளே மலடி என்று குந்தி தேவி சொல்கிறாள். குழந்தைகளைப் பெறாதவர் யாரும் மலடியல்ல என்பதே இதன்பொருள். எனவே நாம் எடுக்கும் முடிவை கடைசி வரை வீரத்துடன் கடைப்பிடிக்க வேண்டும். உறுதியுடன் நடக்க வேண்டும்.அதுதான் நம்மைப் பெற்றவர்களுக்கும், இந்த நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X