திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று இரவு கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துஅருணாச்சலேஸ்வரரின் அருளைப் பெறும் நாள் கார்த்திகைத் தீபத் திருநாளாகும்.
சைவ சமயத் திருத்தலங்களின் தலைமைத் தளமாக விளங்குவது திருவண்ணாமலை ஆகும். இது பஞ்ச பூதத்தலங்களில் அக்கினித் தலமாகப் போற்றப்படுகிறது.
பார்வதி தேவி, கிரிவலம் வந்து கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று மலை உச்சியில் சிவபெருமானை ஜோதிவடிவமாக தரிசனம் செய்து அவரது இடப்பாகத்தில் அமர்ந்தார் என்று புராணம் கூறுகிறது.
இந்த நன்னாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று தீபத் திருவிழாகொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை மலை உச்சியில் உள்ள ஒரு ராட்சத விளக்கில் நெய்யிட்டு, தீபமேற்றப்படும். இதேபோலஅனைவரின் இல்லங்களிலும் அகழ் விளக்குகளால் அலங்கரித்து சிவனையும், அம்மனையும் வழிபடுவார்கள்.
இன்று நடைபெறும் தீபத் திருவிழா குறித்து திருவண்ணாமலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, கோயில்உதவி ஆணையாளர் ஜெயராமன் கூறியதாவது,
மகா தீபத்தைக் காண கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றவர்களும், தர்ம தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களும்கோவிலுக்குள் ராஜகோபுரம் வழியாக வர வேண்டும். வி.ஐ.பி.பாஸ் வைத்திருப்பவர்கள் அம்மணி அம்மன்கோபுரம் வழியாக வர வேண்டும்.
இளம்பச்சை நிற அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் பே கோபுர வாசல் வழியாக வரவேண்டும்.
தீப தரிசனம் முடிந்த பிறகு அனைவரும் பே கோபுர வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும். இவ்வாறுஅதிகாரி ஜெயராமன் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications