திருவள்ளுவர் தினம் வந்தது எப்போது?
திருவள்ளுவர். திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அவர் எப்போது பிறந்தார் என்பது குறித்து பல் வேறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகின்றன.
அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்தி குறுகத்தரித்த குறள் என்ற பெருமை கொண்டது திருக்குறள்.
திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவள்ளுவராண்டு எப்போது துவங்கியது, திருவள்ளுவர் எப்போது பிறந்தார் உள்ளிட்ட தகவல்களை தருகிறார் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர்க.சுப்ரமணியம்.
தமிழாண்டு:
காலம், மிகவும் இன்றியமையாதது. வள்ளுவர் காலம் அறிதல் என்று ஒரு அதிகாரமே வரைந்துள்ளார். இறந்த கால ம், நிகழ் காலம், வருங்காலம்எனப் பொதுவாகக் காலத்தை பிரிப்பர். முக்காலமும் உணர்ந்த ஞானி என்று அழைக்கப் பெறுவது அனைவரும் அறிந்த ஒரு தொடர். குடும்பம், ஊர், நகர்உலகம், சமுதாயம் பற்றிய நிகழ்வுகளைக் கணக்கிட காலம் இன்றியமையாத ஒன்று.
நமது முன்னோர் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை,ஊழி என வரையறை செய்துள்ளனர். 60 நாழிகை கொண்டது ஒரு நாள். நாளை வைகறை, காலை,நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் எனப் பிரித்தனர்.
ஆண்டை இளவேனில், முதுவேனில, கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பகுதிகாளாகப் பிரித்தனர். தொடர் ஆண்டுமுறை நம் நாட்டில் வழக்கத்தில்இல்லை.
60 ஆண்டுகளான பிரபவ முதல் அட்சய வரை இடையில் புகுந்த ஆண்டுகள். இவை தமிழாண்டுகள் இல்லை. ஆரிய முறை ஆண்டுகளாகும்.
திருவள்ளுவர் ஆண்டு:
பிரபவ ஆண்டு முறையில் தமிழ் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு அழிவும், இழிவும் உண்டானதை எண்ணிப் பார்த்து நுண்ணறிவுடையஅறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ம் ஆண்டு சென்னைரப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிஆராய்ந்தனர்.
திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் எனவும், அவர் பெயரில் தொடராண்டைப் பின்பற்றுவது சாலச் சிறந்தது என்றும்,அதையே தமிழாண்டு எனக் கொள்வது என்றும் முடிவுகட்டினர். இந்த முடிவை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டு பின்பற்றத் தொடங்கினர்.
மேற்கண்ட முடிவைச் செய்தவர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார். தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணிணியப்பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார்., நாவலர் சோம சுந்தர பாரதியார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவர்.
திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமை ஏழும் - வழக்கில் உள்ளவை.
திருவள்ளுவரின் காலம் கி.மு. 31. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2001+ 31 = 2032. இப்பொழுது திருவள்ளுவர் ஆண்டு2032 ஆகும்.
தைத் திங்களில் தான் உழவர்களின் விளை பொருள் களஞ்சியத்துக்கு வருகிறது. பொருளாதாரத் திட்டம் வகுக்கும் காலம் தை. கிராமத்தினர் - ஊர்ச்சொத்தை குத்தகைக்கு விடும் காலமும் தை திங்களே ஆகும்.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 முதல் ஏற்று 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர்ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.
எனவே உலகிலுள்ள 10 கோடித் தமிழ் மக்களும் தமிழர் மானம் காத்திட திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்ற வேண்டும். கடிதங்கள், அழைப்பிதழ்கள்ஆவணங்கள் ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டினையே பின்பற்ற வேண்டும்.
திருவள்ளுவர் தமிழ் மொழியில் குறளை எழுதியதாலும், தமிழரானதாலும் குறளையும் வள்ளுவரையும் ஏற்றுக் கொள்ளவும் பிற மொழியினர்தயங்குகின்றனர். ஆனால் அவருடைய பொதுமையை உணர வேண்டும். ஓரிடத்திலேனும், தமிழ் என்றோ, தமிழ் நாடு என்றோ,முவேந்தர் என்றோதிருக்குறளில் குறிப்பிடவில்லை.
அவர் கூறும் கருத்துக்கள் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பெற்றுள்ளதால் - திருக்குறள் உலகமறை என்று மதிக்கப் பெறும் உயரியநூலாகும்.
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தினாற் போல சிறிய குறட்பாக்களில் பெரிய செய்திகள் அடங்கி உள்ளன.
60 ஆண்டு முறை பயனற்றது. -60 ஆண்டு முறையை ஆரியர் தமக்குள்ள செல்வாக்கால் தமிழரசரிடம் புகுத்தினர்.
இப்போது வழங்கும் பிரபவ - அட்சய ஆகிய வருடங்கள் சாலி வாகனன் என்பவரால் (கனிஷ்கர்களால்) கி.பி. 78-ல் ஏற்பட்டவை.
60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதாலும் மிகக் குறுகியதினாலும் வரலாற்று நூலுக்குப் பயன்பட்டது. பிரபவ என்றால் எந்தப் பிரபவஎன்று கூற முடியாததால் இந்த கால அளவு இன்மை பற்றித் தமிழுக்கு ஒரு குறையும் இல்லை.
வழக்கில் உள்ள 60 ஆண்டு முறை சரியில்லை. இதைப் பின்பற்றுவது மானக்கேடு என அறிஞர்களும் - பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும், பேரறிஞர்அண்ணாவும் கூறியுள்ளனர். எனவே தமிழப் பெருமக்கள் தை முதல் நாளைத் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும் தை 2 ஆம் நாளைத் திருவள்ளுவர் நாளென்றும்கொண்டாடுக.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications