வரம் அருளும் வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது.பெரும்பாலும் 3வது ஆடி வெள்ளியன்றோ அல்லது 4வது ஆடி வெள்ளி அன்றோவரும்.
இந்த ஆண்டு (விஷு ஆண்டு) வரலட்சுமி விரதம் ஆடி மாதம் 18ம் தேதி (03.08.2001)அன்று வருகிறது.
பூஜைக்கான காரணங்கள்:
வரலட்சுமி விரதம் திருமணமான பெண்களுக்கானது. சுமங்கலி பெண்கள் தங்கள்குடும்பம் சிறப்புடன் வளமாக வாழ வேண்டும் என்பதற்காக லட்சுமியைபூஜிப்பார்கள். வேண்டிய வரங்களை அருள்வதால் அந்த லட்சுமிக்கு வரலட்சுமிஎன்று பெயர்.
பூஜை முறைகள்:
வரலட்சுமி விரத பூஜைக்கு சில வழிமுறைகள் உள்ளன. வரலட்சுமி விரதத்திற்கு முதல்நாள் (வியாழக்கிழமை) அம்மனை அழைக்க வேண்டும். (வரலட்சுமி அம்மன் முகம்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி வைத்து பூஜை செய்யலாம்அல்லது பித்தளை சொம்பில் சுண்ணாம்பு பூசி அம்மன் முகத்தை வரைந்து வைத்தும்பூஜை செய்யலாம்). அம்மனை பூஜை அறையில் வைப்பதற்கே அம்மனை அழைப்பதுஎன்று பெயர்.
அம்மனை பூஜை அறையில் சுத்தமான பலகையிலோ அல்லது தட்டிலோ கோலம்போட்டு வைக்க வேண்டும். அதன் பின் அம்மனை ஒரு பித்தளை சொம்பிலோ மீதோஅல்லது ஸ்டீல் சொம்பிலோ அரிசி, மஞ்சள், காசுகள் போட்டு, தேங்காய், மாவிலைகும்பம் வைத்து அதன் மேல் வைக்க வேண்டும்.
அம்மன் முகம் இல்லாதவர்கள், சொம்பில் முகம் வரைந்து பூஜை செய்பவர்கள் அந்தசொம்பில் அரிசி, மஞ்சள், காசுகளை போட்டு வைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு பூக்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
அம்மனுக்கு கொழுக்கட்டை, பாயசம், வடை போன்றவற்றை நிவேதனம் செய்யவேண்டும்.
பூஜையின் போது மஞ்சள் கயிற்றை அம்மன் மேல் வைத்து பூஜை செய்ய வேண்டும்.அதன் பின் அந்த மஞ்சள் கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
மணமாகாத பெண்கள் இந்த கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். நல்ல கணவன்வாய்க்க வேண்டும் என்று பெண்கள் இந்த பூஜையில் ஈடுபடுவார்கள்.
வேண்டும் வரம் அருளும் வரலட்சுமி பூஜித்து வேண்டும் வரம் பெறுங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications