சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ஆம் படி உள்ளிட்ட பகுதிகளில் வீடியோ, புகைப்படம் எடுத்தால் கடும் ஆக்ஷன்!
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டாம்படி உள்ளிட்ட பகுதிகளில் வீடியோ, புகைப்படம் எடுத்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. சோபானம், சந்நிதானத்தின் திரு முற்றம், மாளிகைப்புறத்திலும் வீடியோ, புகைப்படம் எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. செல்போன், கேமராக்களை பயன்படுத்தி வீடியோ, புகைப்படங்கள் எடுக்க உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை விதித்துள்ளது காவல்துறை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 16 அன்று மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராடி, 18 படிகளை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மண்டல பூஜை வரும் டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ள நிலையில், இன்னும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். பலர் 41 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி, காடு மலை ஏறி வருகின்றனர்.
கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக பல ஏற்பாடுகளை செய்துள்ளது. விரைவு தரிசனம், ஆன்லைன் பதிவு, மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, போலீஸ் பாதுகாப்பு என அனைத்தும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பக்தர்கள் அதிகரிப்பால் சில இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டாம்படி உள்ளிட்ட பகுதிகளில் வீடியோ, புகைப்படம் எடுத்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. சோபானம், சந்நிதானத்தின் திரு முற்றம், மாளிகைப்புறத்திலும் வீடியோ, புகைப்படம் எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. செல்போன், கேமராக்களை பயன்படுத்தி வீடியோ, புகைப்படங்கள் எடுக்க உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை விதித்துள்ளது காவல்துறை.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications