தை அமாவாசை! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்
ராமேஸ்வரம்: தை அமாவாசை தினமான இன்று பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ராமேஸ்வரத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
ஜனவரி 18 அன்று தமிழகம் முழுவதும் தை அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவது பக்தர்களின் முக்கிய சடங்காகும். இதன் காரணமாக, ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கடல், காவிரி சங்கமிக்கும் பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டு புனித நீராடினர்.

தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னித்தீர்த்தக் கடலில் குவிந்தனர். கடலில் புனித நீராடிவிட்டு, முன்னோர்களுக்கு எள் மற்றும் பிண்டம் சமர்ப்பித்துத் தர்ப்பண பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அதன் பிறகு, ராமநாதசுவாமி கோயிலின் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக, மதுரை, தூத்துக்குடி போன்ற நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படிருந்தன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள பூம்புகாரில், காவிரி ஆறு கடலுடன் சங்கமிக்கும் சங்கமத்துறையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இங்கு புனித நீராடிய பிறகு, வேதியர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் உதவியுடன் முன்னோர்களுக்குப் பலிகர்ம பூஜைகளை நடத்தினர். அரிசி, காய்கறிகள், தானியங்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை தானமாக அளித்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.
அதேபோல, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலின் ருத்ரபாதத்திலும் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தனர். மயிலாடுதுறை துலாக் கட்ட காவேரி, திருவையாறு புஷ்ய மண்டப படித்துறை, கோவை மாவட்டத்தின் பேரூர் படித்துறை, பவானி கூடுதுறை போன்ற முக்கிய நீர்நிலைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு தர்ப்பணம் மற்றும் முன்னோர்களுக்குரிய பூஜைகளைச் செய்து வழிபட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications